அஸ்தினாபுரத்தில் புதிய பாலி கிளினிக் திறப்பு

அஸ்தினாபுரத்தில் லக்‌ஷயா என்ற புதிய பாலி கிளினிக் திறக்கப்பட்டுள்ளது. தாம்பரத்தில் உள்ள லக்‌ஷயா பாலி கிளினிக் தற்போது குரோம்பேட்டை அஸ்தினாபுரத்தில் புதிய கிளையை திறந்துள்ளது. அஸ்தினாபுரம் பெரியார் சாலையில் பிஎஸ்என்எல் எதிரே இந்த கிளினிக் அமைந்துள்ளது. லக்‌ஷயா பாலி கிளினிக்கை திமுக பகுதி செயலாளர்ஏ.கே.கருணாகரன் மாமன்ற உறுப்பினர் திருமதி மகாலட்சுமி கருணாகரன் திறந்து வைத்தனர். மருத்துவ இயக்குனர் டாக்டர்.சித்ரா மற்றும் தலைமை செயல் அதிகாரி ஆனந்த் அவர்களை வரவேற்றனர்.

செங்கல்பட்டு மாவட்டம், தாம்பரம் சட்டமன்ற தொகுதியில், தாம்பரம் & வண்டலுர் இரயில் நிலையங்களுக்கு இடையில் இரயில்வே கடவு எண். 32க்கு பதிலாக பெருங்களத்தூர் இரயில் நிலையம் அருகில் இரயில்வே திட்டப் பணிகளின் கீழ் ரூ.60.13 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள மேம்பாலத்தினை

பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திருப்பெரும்புதூர் நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு முன்னிலையில் மாவட்ட ஆட்சித் தலைவர் ச.அருண்ராஜ், தலைமையில் குறுசிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் துவக்கி வைத்தார். உடன் தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.ராஜா, பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர் இ.கருணாநிதி, செங்கல்பட்டு சட்டமன்ற உறுப்பினர் உறுப்பினர் வரலட்சுமி மதுசூதனன், தாம்பரம் மாநகராட்சி ஆணையர் சீ.பாலச்சந்தர், தாம்பரம் மாநகராட்சி மேயர் வசந்தகுமாரி கமலக்கண்ணன், துணை மேயர் கோ.காமராஜ், மண்டலக் குழு தலைவர்கள் து.காமராஜ், சு.இந்திரன், மாமன்ற […]

ஆந்திர முதல்வராக பதவியேற்கும் சந்திரபாபு நாயுடு உடன் 24 பேர் அமைச்சர்களாக பதவி ஏற்க உள்ளனர்

இதில் கூட்டணி கட்சிகளான ஜனசேனா கட்சியில் 3 பேருக்கும், பாஜகவில் ஒருவருக்கும் அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு முதலமைச்சர்‌ மு.க.ஸ்டாலின்‌ இன்று (24.1.2024) மதுரை மாவட்டம்‌, அலங்காநல்லூர்‌, கீழக்கரை கிராமத்தில்‌ உலகத்தரத்துடன்‌ கட்டப்பட்டுள்ள கலைஞர்‌ நூற்றாண்டு ஏறுதழுவுதல்‌ அரங்கம்‌ திறப்பு விழாவில்‌, அரங்கத்தில்‌ நிறுவப்பட்டுள்ள முத்தமிழறிஞர்‌ கலைஞர்‌ திருவுருவச்‌ சிலையை திறந்து வைத்தார்

இவ்விழாவில்‌, அமைச்சர்‌ பெருமக்கள்‌, நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள்‌, தலைமைச்‌ செயலாளர்‌ சிவ்‌ தாஸ்‌ மீனா, உள்ளாட்சி அமைப்புகளின்‌ பிரதிநிதிகள்‌ மற்றும்‌ அரசு உயர்‌ அலுவலர்கள்‌ கலந்து கொண்டனர்‌.

தமிழ்நாடு முதலமைச்சர்‌ மு.க.ஸ்டாலின்‌‌ இன்று (24.1.2024) மதுரை மாவட்டம்‌, அலங்காநல்லூர்‌, கீழக்கரை கிராமத்தில்‌ 66.80 ஏக்கர்‌ நிலப்பரப்பில்‌, 77,683 சதுரஅடி பரப்பளவில்‌ 62.78 கோடி ரூபாய்‌ செலவில்‌ உலகின்‌ முதல்‌ பிரம்மாண்டமான ஏறுதழுவுதல்‌ அரங்கமான கலைஞர்‌ நூற்றாண்டு ஏறுதழுவுதல்‌ அரங்கத்தை திறந்து வைத்தார்

இவ்விழாவில்‌, அமைச்சர்‌ பெருமக்கள்‌, நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள்‌, தலைமைச்‌ செயலாளர்‌ சிவ்‌ தாஸ்‌ மீனா, உள்ளாட்சி அமைப்புகளின்‌ பிரதிநிதிகள்‌ மற்றும்‌ அரசு உயர்‌ அலுவலர்கள்‌ கலந்து கொண்டனர்‌.

கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் இயங்க தொடங்கியது

சென்னை அடுத்த வண்டலூர் அருகே கிளாம்பாக்கத்தில் புதிதாய் கட்டபட்டுள்ள நவீன பேருந்த நிலையத்தை முதல்வர் ஸ்டாலின் குத்துவிளக்கேற்றி திறந்து வைத்ததோடு கொடியசைத்து பேருந்து சேவைகளை துவக்கி வைத்தார். இந்த பேருந்து நிலையத்தில் இருந்து தினசரி 2310 அரசு பேருந்துகளும் 840 ஆம்னி பேருந்துகளும் தென் மாவட்டங்களுக்கு செல்லகூடிய வகையில் இயக்கபட உள்ளதோடு புறநகர் பேருந்துகளும் இயக்கபடுகின்றது. மருத்துவமனை, புற காவல் நிலையம், நகரும் படிக்கட்டு, ஓய்வறை, மின் தூக்கி, வனிக மையங்கள், உணவகம், பெரியளவிலான வாகன நிருத்தம் […]

சென்னை, ராஜீவ் காந்தி சாலை (OMR), “U” வடிவ மேம்பாலம்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை சார்பில் சென்னை, ராஜீவ் காந்தி சாலை (OMR),இந்திரா நகர் சந்திப்பில் 18.15 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள “U” வடிவ மேம்பாலத்தை காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில்,தலைமைச் செயலகத்தில் சிவ் தாஸ் மீனா, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் பிரதீப் யாதவ் தமிழ்நாடு சாலை மேம்பாட்டுத் திட்ட இயக்குநர் எஸ்.பிரபாகர் செயல் இயக்குநர் எம்.விஜயா ஆகியோர் கலந்து […]

இந்தியாவின் மிக நீளமான கண்ணாடி பாலத்தை திறந்து வைத்தார், மாநில சுற்றுலாத்துறை அமைச்சர் முகமது ரியாஸ்

கேரளாவின் வாகமனில், எழில் கொஞ்சும் மலைகளின் அழகை ரசிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள, இந்தியாவின் மிக நீளமான கண்ணாடி பாலத்தை திறந்து வைத்தார், மாநில சுற்றுலாத்துறை அமைச்சர் முகமது ரியாஸ் 40 மீட்டர் நீளமுடைய இந்த பாலம், ₹3 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பாலத்தில் நடந்து சென்று இயற்கை அழகை ரசிக்க, ஒரு நபருக்கு (10 நிமிடங்கள்) ₹500 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. ஒரே நேரத்தில் 15 சுற்றுலா பயணிகளுக்கு மேல், அனுமதிக்கப்பட மாட்டார்கள் என கூறப்பட்டுள்ளது

100 மஞ்சள் நிற பேருந்துகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக கொடியசைத்து தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

தமிழ்நாடு போக்குவரத்துக் கழகம் சார்பில் நவீன வசதிகளுடன் சீரமைக்கப்பட்ட 100 மஞ்சள் நிற பேருந்துகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக கொடியசைத்து தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். மாநிலம் முழுவதும் உள்ள 8 கோட்டங்களில், சேதமடைந்த பேருந்துகள் சீரமைப்பில் ஒரு பகுதியாக பழைய வண்ணம் மாற்றப்பட்டு, மஞ்சள் மற்றும் வெளிர் மஞ்சள் நிறத்துக்கு பேருந்துகள் மாற்றப்பட உள்ளது. நிறம் மட்டுமின்றி, பேருந்துகளின் இருக்கை, அமரும் வசதி போன்றவை விரிவாக இருக்கும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.