சேலம் இளங்கோவனின் முசிறி கல்வி நிறுவனங்களில் 3-ம் நாளாக ஐடி ரெய்டு

திருச்சி: சேலம் புறநகர் மாவட்ட அதிமுக செயலாளர் இளங்கோவன். தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களின் முன்னாள் தலைவர். அதிமுக பொதுச்செயலாளர் பழனிச்சாமியின் நெருங்கிய நண்பர். திருச்சி மாவட்டம் முசிறி அருகே எம்.புதுப்பட்டியில் இளங்கோவனுக்க சொந்தமாக சுவாமி அய்யப்பா அறக்கட்டளை என்ற பெயரில் எம்ஐடி பாலிடெக்னிக் கல்லூரி, கலை மற்றும் அறிவியல் கல்லூரி, வெள்ளாளப்பட்டியில் வேளாண் பொறியியல் கல்லூரி ஆகியவை இயங்கி வருகின்றன. இந்த கல்வி நிறுவனங்களின் துணைத்தலைவராக சேலம் இளங்கோவன் மகன் பிரவீன் உள்ளார். இந்நிலையில் இந்த கல்வி […]

முன்னாள் மத்திய அமைச்சரும் திமுக எம்.பி.யுமான ஜெகத்ரட்சன் வீடு உள்ளிட்ட வரித்துறையினர் சோதனை

முன்னாள் மத்திய அமைச்சரும் திமுக எம்.பி.யுமான ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான வீடு மற்றும் அலுவலகம், தி.நகரில் உள்ள நட்சத்திர ஓட்டல், குரோம்பேட்டையில் உள்ள எம்.பி.யின் உறவினர் வீடு, வேளச்சேரியில் அவருக்கு சொந்தமாக உள்ள மருத்துவமனை உள்ளிட்ட 70 மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இதுதவிர பூந்தமல்லியில் உள்ள கல்லூரியிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளனர்.

அனல்மின் நிலையங்களுக்கு பொருள் இறக்குமதி செய்ததில் வரி ஏய்ப்பு தமிழகத்தில் 40 இடங்களில் ஐடி ரெய்டு: மின்வாரிய மாஜி அதிகாரி, மின்வாரிய நிறுவனங்களில் நடந்தது

சென்னை: தமிழ்நாட்டில் உள்ள 4 அனல் மின் நிலையங்களுக்கு உதிரிபாகங்கள், இயந்திரங்கள் கொள்முதல் செய்ததில் பல கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்ததாக ராதா இன்ஜினியரிங் குழுமம் மற்றும் அதன் துணை நிறுவனத்திற்கு சொந்தமான சென்னை உட்பட மாநிலம் முழுவதும் 40 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். தமிழ்நாட்டின் மின் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் தூத்துக்குடி, மேட்டூர், வடசென்னை, எண்ணூர் ஆகிய 4 இடங்களில் நிலக்கரி மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யும் அனல் […]