பசிக்கும் போது தான் சாப்பிட வேண்டுமா?

நாம் தினமும் மூன்று வேளைகள் உணவு உட்கொண்டாலும், பசி பற்றிய பல விஷயங்களை அறியாமல்தான் இருக்கிறோம்.பசிதான் உலகத்தை இயக்கிக் கொண்டிருக்கிறது என்ற உண்மையை நாம் உணர வேண்டும். பசிக்கும் நேரத்தில் சாப்பிட வேண்டும். எப்போது உணவு தேவையோ அந்த நேரத்தில் வயிற்றில் சில அமிலங்கள் சுரக்கும். அதன் விளைவாக பசி உணர்வு ஏற்படும்.அந்த நேரத்தில் சாப்பிட்டால்தான், உணவு முழுமையாகச் செரிமானமாகி சத்துகளை உடலால் கிரகிக்க முடியும். பசி உணர்வு இல்லாதபோது சாப்பிட்டால் இந்தச் செயல்பாடு முறையாக நடக்காது. […]