கிளி, பூனை, அணில் வீடுகளில் வளர்க்க கட்டுப்பாடு

சென்னை -வன உயிரின பாதுகாப்பு சட்டத்தில் பட்டியலிடப்பட்ட கிளி, பூனை, அணில் உள்ளிட்ட உயிரினங்களை வீடுகளில் வளர்ப்பவர்களுக்கு, புதிய கட்டுப்பாடுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. வனத்துறை வெளியிட்ட அறிவிப்பு: வன உயிரின பாதுகாப்பு சட்டத்தின், 4வது அட்டவணையில், கிளிகள் உள்ளிட்ட பறவைகள், பூனைகள், அணில்கள், பாம்புகள், தவளை, ஆமைகள் சார்ந்த, 80 வகை உயிரினங்கள் பட்டியலிடப்பட்டு உள்ளன. இந்த உயிரினங்களை, வீடுகளில் வளர்ப்பதை ஒழுங்குபடுத்துவதற்கான விதிகளை, மத்திய அரசு பிறப்பித்துள்ளது. இதன்படி, வீடுகளில் இந்த உயிரினங்களை வளர்த்தல், இனப்பெருக்கம் செய்தலில் […]