தமிழகத்தில்10 ந்தேதி பள்ளிகள் திறப்பு

தமிழகத்தில் வருகிற 6-ம் தேதி பள்ளிகள் திறப்பதாக அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது 10-ம் தேதி திறக்கப்படும் என்று அறிவித்துள்ளது தமிழக பள்ளிக் கல்வித்துறை. வெயில் காரணமாக இந்த மாற்றம்
தமிழ்நாட்டில் மீண்டும் 108 டிகிரி பாரன்ஹீட் வெயில் சுட்டெரிக்கும் என்று தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் கூறியுள்ளார்

கடந்த வாரத்தில் கனமழை பெய்து வந்த நிலையில் இந்த வாரம் வெயில் சுட்டெரிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. ராணிப்பேட்டை, வேலூர், மாவட்டங்களில் வெயில் 108 டிகிரி பாரன்ஹீடை தாண்டி கொளுத்தும் எனவும், மற்ற மாவட்டங்களில் வெயில் குறைந்து காணப்படும் எனவும் பிரதீப் ஜான் கூறியுள்ளார். கன்னியாகுமரி மாவட்டத்தில் மழையை எதிர்பார்க்க முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.
ராஜஸ்தானில் கடந்த 3 நாட்களில் மட்டும் 22 பேர் வெப்ப அலை காரணமாக உயிரிழந்துள்ளனர்

நாட்டிலேயே அதிகபட்சமாக ராஜஸ்தானில் பலோடி நகரில் 122 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவானது
வெயிலால் ஏற்படும் கருமையை நீக்க

அழகான முகத்தில் திருஷ்டி போல் வெயிலில் ஏற்படும் கருமை இருக்கும். முகத்தின் கருமை நீங்கி தங்கத்தை போன்ற ஜொலிக்கும் சருமம் வேண்டுமா! அதையும் வீட்டில் இருந்தபடியே பெற்றிடலாம்.வீட்டிலிருக்கும் பொருட்களை வைத்தே உங்கள் அழகை மேலும் அழகாக்கி கொள்ளலாம்.தேவையானப் பொருட்கள்: எலுமிச்சை சாறு – 1 டேபிள் ஸ்பூன், சர்க்கரை – 1 டேபிள் ஸ்பூன், தேன் – அரை டீஸ்பூன். இது அத்தனையும் உங்க வீட்டு சமையலறை பொருட்கள்தான். இதுதான் உங்களை அழகாக்குகிறது.செய்முறை: ஒரு சுத்தமான பௌலில் […]
கோடை வெயிலிலிருந்து

கோடை காலம் வந்துவிட்டது, இது பல சிக்கல்களைக் கொண்டுவருகிறது. இந்த பருவத்தில், தோல் பல சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. இவற்றில் ஒன்று வெயிலின் பிரச்சினை, இது வெயிலில் நீண்ட நேரம் இருப்பதால் ஏற்படுகிறது. இதற்காக பெண்கள் சன்ஸ்கிரீனைப் பயன்படுத்தினாலும், அவர்களால் அதிக பலனை நிரூபிக்க முடியவில்லை. இதுபோன்ற சூழ்நிலையில், இன்று நாங்கள் உங்களுக்காக சில வீட்டு வைத்தியங்களைக் கொண்டு வந்துள்ளோம், இதன் உதவியுடன் நீங்கள் வெயிலின் இந்த பிரச்சினையிலிருந்து விடுபடலாம். சுத்தமான தேன் மூல தேன் ஒரு […]
தமிழ்நாட்டில் கத்தரி வெயில் நாளை தொடங்குகிறது

தமிழ்நாட்டின் வட உள் மாவட்டங்களில் திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், ஈரோடு, நீலகிரி, கோவை, திருப்பூர், திருச்சி, அரியலூர், பெரம்பலூரில் அனேக இடங்களில் இன்றும், நாளையும் வெப்ப அலை வீசுவதால் வெயில் சுட்டெரிக்கும் எனவும், இயல்பை விட 5 டிகிரி செல்சியஸ் வரை வெப்ப அளவு கூடும் எனவும் வானிலை மையம் எச்சரித்துள்ளது.
“அக்னி நட்சத்திரம்’ என்று கூறப்படும் கத்தரி வெயில் காலம் ஒவ்வொரு ஆண்டும் மே மாதத்தில் இருக்கும். தமிழ் பஞ்சாங்கம் அடிப்படையில் ஒவ்வொரு ஆண்டும் அக்னி நட்சத்திரம் கணக்கிடப்பட்டு வருகிறது

அந்த வகையில் நடப்பாண்டு கத்தரி வெயில் நாளை மறுதினம் தொடங்குகிறது.இந்த கத்தரி வெயில் வருகிற 28-ந்தேதி வரை அதாவது, 25 நாட்கள் தொடர்ந்து வாட்டி வதைக்க காத்திருக்கிறது. பொதுவாக கத்தரி வெயில் காலத்தில்தான் வெயிலின் தாக்கம் உக்கிரமாக இருக்கும். ஆனால் கடந்த மார்ச் மாதம் இறுதியில் இருந்தே வெப்பத்தின் தாக்கம் அதிகமாக உள்ளது. அதிலும் இந்த மாத தொடக்கத்தில் இருந்தே வெயில் சுட்டெரித்து வருகிறது. குறிப்பாக சேலம், ஈரோடு, கரூர், தர்மபுரி, திருத்தணி, திருப்பத்தூர், வேலூர் ஆகிய […]
வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் காலை 11 மணி முதல் மாலை 3.30 மணி வரை தேவையின்றி வெளியே வர வேண்டாம் என்று சென்னை மாவட்ட நிர்வாகம் எச்சரித்துள்ளது

தமிழகம் முழுவதும் கடந்த பிப்ரவரி மாத இறுதியில் இருந்து வெயில் வாட்டி எடுத்து வருகிறது. மார்ச், ஏப்ரல் மாதங்களில் வெயிலின் தாக்கம் மேலும் அதிகரித்தது. குறிப்பாக ஏப்ரல் மாதம் பல மாவட்டங்களில் வெயில் சதத்தை கடந்தது. இதனால், மக்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.வெயிலின் தாக்கத்தால் மக்கள் வீடுகளுக்கு உள்ளேயே முடங்கினர். வெயிலின் உக்கிரம் என்று அழைக்கப்படுகின்ற கத்தரி வெயில் வருகிற 4ம் தேதி தொடங்க உள்ளது. கத்திரி வெயில் தொடங்கிய பின்னர் மேலும் வெப்பத்தின் தாக்கம் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக […]
“தமிழகத்தில் வெப்பநிலை அதிகரிக்கும்”

தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 3 – 4 டிகிரி செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும். நாளை முதல் 03ம் தேதி வரை வட தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் 3 – 5 டிகிரி செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும்.
இன்று முதல் வரும் அடுத்தடுத்த நாட்களில் வெயிலின் தாக்கம் 110டிகிரி வரை அதிகரிக்க வாய்ப்பு!!!

வெயில் அதிகரிக்கும் போது ஆக்சிஜன் லெவல் மிகக் குறைவாக இருக்கும் எனவே மே மாதம் முடியும் வரை மதியம் ஒரு மணி முதல் மாலை 5 மணி வரைபெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை வெளியில் செல்வதை தவிர்க்கவும். நோயாளிகள் கர்ப்பிணிகள் சற்று எச்சரிக்கையுடன் இருங்கள். ஐஸ் கட்டிகள், ஐஸ் வாட்டர், கார்பனேட் குளிர்பானங்கள் கண்டிப்பாக தவிர்க்கவும். பழச்சாறு அருந்தலாம் அதுவும் ஐஸ் போடாமல், மற்றும் இளநீர்… இது எல்லாவற்றையும் விட மிகச் சிறந்தது மோர். பாட்டிலில் எடுத்து […]