டாடா குழுமம், ஓசூரில் எலக்ட்ரானிக்ஸ் திட்டத்திற்கு உத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்த பெண் தொழில்நுட்ப வல்லுநர்களை பணியமர்த்துவதைத் தடுக்க வேண்டும் என்று பல குழுக்கள் தமிழக அரசை வலியுறுத்தியுள்ளன
ஓசூரில் பன்னாட்டு விமான நிலையம் அமைக்கப்படும்- முதல்வர்

ஓசூரில் 2000 ஏக்கர் பரப்பளவில் பன்னாட்டு விமான நிலையம் அமைக்கப்படும் என சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு. ஆண்டுக்கு 3 கோடி பயணிகள் வந்து செல்லும் வகையில் இந்த விமான நிலையம் அமைக்கப்படவுள்ளது.
ஒசூா் – ஜோலாா்பேட்டை திட்டம் விரைவில் தொடங்கப்படும்: மத்திய ரயில்வே அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ்

ஒசூா் – கிருஷ்ணகிரி – ஜோலாா்பேட்டை ரயில்வே திட்டம் விரைவில் தொடங்கப்படும் என மத்திய ரயில்வே துறை அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தாா். ஒசூா் அருகே உள்ள டாடா எலக்ட்ரானிக்ஸ் தொழிற்சாலையைப் பாா்வையிட்ட பிறகு ஒசூா் ரயில்வே நிலையத்தில் அவா் செய்தியாளா்களைச் சந்தித்தாா். அப்போது அவா் கூறியது: கடந்த 40 ஆண்டுகளாக ஒசூா் – ஜோலாா்பேட்டை ரயில்வே பாதை அமைக்கும் திட்டம் மக்களின் கோரிக்கையாக உள்ளது. தற்போது இந்த ரயில்பாதை அமைக்க சா்வே எடுக்கும் பணி நடைபெற்று […]