அமைச்சர் துரைமுருகன் மருத்துவமனையில் அனுமதி

சளி பிரச்சினை காரணமாக அமைச்சர் துரைமுருகன் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதி பரிசோதனைக்கு பிறகு இன்று அமைச்சர் துரைமுருகன் வீடு திரும்புவார் என தகவல்

மருத்துவரைக் குத்தியது ஏன்? – விக்னேஷ் வாக்குமூலம்.

மருத்துவரை கத்தியால் குத்த வேண்டும் என்று திட்டமிட்டு வீட்டிலிருந்தே கத்தி எடுத்து வந்தேன். தாயார் வலியால் துடித்ததை தாங்கிக் கொள்ள முடியாததால் காய்கறி வெட்டும் கத்தியை எடுத்து வந்து மருத்துவரை குத்தியதாக விக்னேஷ் வாக்குமூலம் – காவல்துறை தகவல் ஹீமோ சிகிச்சை அளவுக்கு அதிகமாக அளித்ததால்தான் தாயாருக்கு உடல்நிலை பாதிப்பு என மருத்துவருடன் விக்னேஷ் வாக்குவாதம்.

அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், அரசு மருத்துவமனைகள், மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் இருக்கின்ற படுக்கை விரிப்புகள் தினமும் சுத்தப்படுத்தப்பட்டு, புதிய படுக்கை விரிப்புகளாக இருக்க வேண்டுமென்று அரசு பல முன்னெடுப்புகளை எடுத்து வருகிறது

அந்த வகையில் தமிழ்நாடு மருத்துவ சேவைகள் கழகம் சார்பில் கொள்முதல் செய்யப்பட்டு ரூ.65 லட்சம் செலவில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வண்ணத்தில் படுக்கை விரிப்புகள் பயன்படுத்த சுகாதாரத்துறை முடிவு செய்துள்ளது. அதாவது திங்கட்கிழமை பிங்க் கலர், செவ்வாய்க்கிழமை அடர்புளு கலர், புதன்கிழமை மெரூன் கலர், வியாழக்கிழமை வைலட் கலர், வெள்ளிக்கிழமை கிரீன் கலர் மற்றும் சனிக்கிழமை லைட்புளூ கலர் ஆகிய 6 வண்ணங்களில் புதிய படுக்கை விரிப்புகள் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது. முதலில் இந்த திட்டம் […]