முதன்மைச் செயலாளர் ககன்தீப் சிங் பேடி ஆய்வு

மருத்துவம்- மக்கள் நல்வாழ்வுத்துறை அரசு முதன்மைச் செயலாளர் ககன்தீப் சிங் பேடி, இன்று (24.07.2023) தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட குரோம்பேட்டை அரசு பொது மருத்துவமனை வளாகத்தில் ரூ.6 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் மகப்பேறு குழந்தைகள் நலப் பிரிவு கட்டடப் பணிகளையும், கட்டடத்திற்கான வரைபடத்தினையும் பார்வையிட்டார். இந்த ஆய்வின்போது, தேசிய நல வாழ்வு குழுமத் திட்ட இயக்குநர் ஷில்பா பிரபாகர் சதீஷ், தாம்பரம் மாநகராட்சி ஆணையாளர் ஆர். அழகுமீனா, உட்பட உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
குளோபல் மருத்துவமனையில் பெண்களுக்கு நவீன சிகிச்சை மையம்

பெரும்பாக்கம் கிளினிக்கில் குளோபல் மருத்துவமனையில் கல்லீரல், இதயம், நரம்பியல் என பல்வேறு அதிநவீன சிகிச்சைகள் அளிக்கப்பட்டுவரும் நிலையில் மளிர்களுக்கான பல்வேறு மேம்படுத்தப்பட்ட சிகிச்சை மையம் இன்று திறக்கப்பட்டது. பெண்களுக்கான மகப்பேறு, கருத்தரித்தல், யூட்ரல் மாற்று சிசிக்சை என பல்வேறு சிக்கலான அறுவை சிகிச்சையை மும்பை டாக்டர் பதமபிரியாவுடன் மும்பை டாக்டர் ஜெய் மேத்தாவுடன் இணைந்து நுந்துளை அறுவை சிசிக்சைகள் அளிக்கவுள்ளதாக தெரிவித்தனர். இதுவரை 10க்கும் மேற்பட்ட மகளீர்களுக்கு மேம்படுத்தப்பட்ட சிகிச்சைகள் அளிக்கப்பட்டுள்ளதல்லதாகவும் இனி தொடந்து தென் இந்திய […]
ஆவடி நாசர் மருத்துவமனையில் அனுமதி

முன்னாள் அமைச்சர் ஆவடி நாசர் திடீர் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சென்னை கிரீம்ஸ் ரோடு அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். தற்போதுவரை அவருக்கு என்ன பிரச்னை என்பது தெரியவில்லை. அவரது உடல்நிலை குறித்து அப்போலோ மருத்துவமனை விரைவில் அறிக்கை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பருவநிலை மாற்றத்தால் கடலூர் மாவட்டத்தில் பரவி வரும் மர்ம காய்ச்சல் எதிரொலி

கடலூர் அரசு மருத்துவமனையில் குவிந்து வரும் நோயாளிகளின் கூட்டம். கடலூர் அரசு மருத்துவமனையில் நோயாளிகள் நீண்ட வரிசையில் காத்திருப்பு. இன்று காலை மட்டும் 1000க்கும் மேற்பட்டோர் காய்ச்சல் பாதிப்புக்கு சிகிச்சை. கடலூர் அரசு மருத்துவமனையில் போதிய இடவசதி இல்லாததால் கடும் நெருக்கடி என புகார்.
பரிசோதனை முடிந்து முதலமைச்சர் வீடு திரும்பினார் .
உடல் பரிசோதனை முடிந்து அப்பல்லோ மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார் முதலமைச்சர் ..