எழும்பூர் மருத்துவமனையில் குழந்தைகளை கொண்டு செல்லும் வண்டியில் உட்கார்ந்து விளையாடும் பெண் ஊழியர் ….

சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் உடல்நலம் பாதிக்கப்பட்ட குழந்தைகளை கொண்டு செல்லும் வண்டில் ,” இன்று (13-09-2023) மதியம் கிரிஸ்டல் என்ற தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் ஒப்பந்த பெண் ஊழியர் உட்கார்ந்து விளையாடும் காட்சி. அந்த பெண் ஊழியரை அந்த வண்டியில் அமர வைத்து ஊழியர்கள் தள்ளி செல்லும் காட்சி. இதுகுறித்து எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனை நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சென்னை ஓமந்தூரார் அரசு பன்னோக்கு மருத்துவமனையில், 27 வயது இளைஞருக்கு வெற்றிகரமாக இருதய மாற்று அறுவைச் சிகிச்சை நடந்தது

மூளைச்சாவு அடைந்த 57 வயது நபரின் இருதயத்தை பொருத்தி அரசு மருத்துவர்கள் சாதனை. இதுவரை இம் மருத்துவனையில் 11 இருதய மாற்று அறுவை சிகிச்சைகள் வெற்றிகரமாக நடந்துள்ளன.
குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் மருந்துகள் வழங்குவதில் குளறுபடி

குரோம்பேட்டையில் உள்ள அரசு பொது மருத்துவமனையில் தினமும் ஆயிரக்கணக்கான நோயாளிகள் சிகிச்சைக்கு வந்து செல்கின்றனர். இந்த மருத்துவமனையில் மருந்துகள் வழங்குவதில் குளறுபடி ஏற்பட்டது இதனால் நீண்ட கியூ வரிசையில் நோயாளிகள் காத்திருக்கும் சூழ்நிலை ஏற்பட்டது பயிற்சி மாணவர்கள் மாத்திரைகளை முறையாக வழங்கவில்லை எனவும் புகார் எழுந்தது. இந்நிலையில் பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர் இ.கருணாநிதி தலைமையில் அதிகாரிகள் இன்று குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் ஆய்வு செய்தனர். அரசு மருத்துவமனையில் மருந்துகள் வழங்கும் பகுதியை ஆய்வு செய்த சட்டமன்ற உறுப்பினர் […]
கர்நாடக முன்னாள் முதல்வர் மருத்துவமனையில் அனுமதி

பெங்களூரு ஜெய்நகரில் உள்ள அப்போல்லோ மருத்துவமனையில் கர்நாடகாவின் முன்னாள் முதல்வர் குமாரசாமி உடல்நலக்குறைவு காரணமாக அனுமதி குமாரசாமி உடல்நிலை சீராக உள்ளதாகவும், தொடர் கண்காணிப்பில் உள்ளதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தகவல்
ஓமந்தூரார் பன்னோக்கு மருத்துவமனை ஒருபோதும் தலைமைச் செயலகமாக மாறாது: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி

ஓமந்தூரார் பன்னோக்கு மருத்துவமனை ஒருபோதும் தலைமைச் செயலகமாக மாறாது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த, அமைச்சர் மா.சுப்பிரமணியன், 500க்கு மேற்பட்ட முறை இந்த பதிலை கூறிவிட்டேன்; ஓமந்தூரார் மருத்துவமனை தலைமைச் செயலகமாக மாறாது. டெங்குவால் எந்த பாதிப்பும் இல்லை; இறப்பும் இல்லை என கூறினார்.
அமைச்சர் அன்பில் மகேஷ் மருத்துவமனையில் அனுமதி

தருமபுரி: தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சேலத்தில் இருந்து தருமபுரி மாவட்டம் வழியாக கிருஷ்ணகிரியில் நடைபெறும் அரசு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக சனிக்கிழமை காரில் சென்றுக் கொண்டிருந்தார். அப்போது அவருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர் காரிமங்கலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு […]
எய்ம்ஸ் கட்டப்படும் என்று நிர்மலா சீதாராமன் பேசியபோது, எப்போது எப்போது என்று திமுக எம்.பி.க்கள் முழக்கம்

மத்திய அரசுதான் முழுக்க முழுக்க ரூ.1977 கோடி மதிப்பீட்டில், ரூ.1627 கோடி கடனில் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையை கட்டிக் கொடுக்கிறது. இதனால் தமிழ்நாட்டிற்கு எந்த நிதிச் சுமையும் இல்லை; இதனால் அதைப்பற்றி கவலைப் பட வேண்டாம்- மதுரை ஏய்ம்ஸ் கட்டுமானம் குறித்து மக்களவையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேச்சு.
டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து

6 தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டு தீயை அணைக்கும் பணி தீவிரம்.
கை அகற்றப்பட்ட குழந்தை உயிர் இழந்தது

ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் ஒரு குழந்தைக்கு தவறான சிகிச்சை அளித்ததாக குற்றச்சாட்டு அளிக்கப்பட்ட நிலையில் அக்குழந்தையின் ஒரு கை அகற்றப்பட்ட பின்னர் தற்போது அக்குழந்தை இராமநாதபுரம் மாவட்டத்தில் அவரது இல்லத்தில் இன்று காலை உயிர் இழந்து விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த தம்பதியர்களுக்கு பிறந்த 1.1/2 வயது குழந்தையை உடல் நலம் சரியில்லாமல் தலை வீக்கம் இருந்ததால்ஒரு சில மாதங்களுக்கு முன் சென்னை ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் குழந்தைக்கு உரிய […]
அரசு மருத்துவமனையில் ககன்தீப் சிங் பேடி ஆய்வு

மருத்துவம்- மக்கள் நல்வாழ்வுத்துறை அரசு முதன்மைச் செயலாளர் ககன்தீப் சிங் பேடி, இன்று (24.07.2023) தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட குரோம்பேட்டை அரசு பொது மருத்துவமனையில் புறநோயாளிகளின் பிரிவினைப் பார்வையிட்டு, நோயாளிகளிடம் நலம் விசாரித்து, வழங்கப்படும் சிகிச்சைகள் குறித்தும், அடிப்படை வசதிகள் குறித்தும் கேட்டறிந்தார். இந்த ஆய்வின்போது, தேசிய நல வாழ்வு குழுமத் திட்ட இயக்குநர் ஷில்பா பிரபாகர் சதீஷ், தாம்பரம் மாநகராட்சி ஆணையாளர் ஆர். அழகுமீனா, அவர்கள் உட்பட உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.