மியாட் மருத்துவமனையில் பாதுகாப்பு அதிகரிப்பு

தேமுதிக தலைவர் விஜயகாந்த் சிகிச்சை பெற்று வரும் மியாட் மருத்துவமனையை சுற்றி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. நவ.18ஆம் தேதி மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட விஜயகாந்தின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக மருத்துவமனை தரப்பில் கூறப்பட்டது. இந்நிலையில், மருத்துவமனை முன்பு தேமுதிக தொண்டர்கள் அதிக அளவில் வரக்கூடும் என்பதால் பாதுகாப்பு நடவடிக்கையாக போலீஸ் குவிக்கப்பட்டுள்ளது.
தாம்பரம் சானடோரியம் அரசு நெஞ்சக நோய் மருத்துவமனை வளாகத்தில் மழைநீர் தேக்கம், நோயாளிகள் அவதி

தாம்பரம் சானடோரியத்தில் உள்ள அரசு நெஞ்சகநோய் மருத்துவமனை உள்ளது. இந்த வளாகத்தில் முழுவதும் மழைநீர் சூழ்துள்ளதால் வெளிநோயாளிகள், பார்வையாளர்கள் மருத்துவமனை சென்று வரமுடியாமல் மழைநீரில் நடந்துசென்றனர். மேலும் அங்கு பயன்பாட்டில் இல்லாத கட்டிடத்தில் மழைநீர் தேக்கம் அடைந்துள்ளது. அந்த கட்டிடத்தை சுற்றியுள்ள பகுதியில் ஆகாயதாமரை செடிகள் சூழ்ந்த நிலையில் உள்ளதால் நாள் பார்பதற்கு குளம்போல் காட்சியளிக்கிறது. ஏற்கனவே தாழ்வான பகுதியான இந்த மருத்துவமனையில் அருகாமையில் உள்ள பச்சமலை நீர் இப்பகுதியில் தேங்கி ஜி.எஸ்.டி சாலையில் உள்ள சிறிய […]
கோவை அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை பெறுவதற்காக அனுமதிக்கப் பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

9 பேர் டெங்குவுக்காகவும், 23 பேர் காய்ச்சலுக்காகவும் அனுமதி. டெங்கு எச்சரிக்கைக்கு முன்னதாக 5 பேர் சிகிச்சை பெற்று வந்த நிலையில், ஒரே நாளில் கூடுதலாக 4 பேர் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டனர்.
தேர்தல் முடிந்த 3-வது நாளில் அதிகாரி மருத்துவமனையில் அனுமதி

ராஜஸ்தான் தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன் குப்தா, ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மன்சிங் மருத்துவமனையில் இன்று (செவ்வாய்கிழமை) அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலை சீராக இல்லாததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகத்தர்தல் ஆணைய அலுவலகத்தின் செய்தித்தொடர்பாளர் .தெரிவித்துள்ளார்.
சென்னை, ஓமந்தூரார் மருத்துவமனையில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு மூளை நரம்பியல் பரிசோதனை

இந்த சோதனை மூளையின் electrical செயல்திறனை கண்டறியும் பரிசோதனை முடிவுகளை நரம்பியல் நிபுணர்கள் ஆய்வு செய்ய உள்ளனர்
அரசு மருத்துவமனையில் நடந்த பிரசவத்துக்கு 5,000 லஞ்சம் கேட்ட செவிலியர்.. 3,000 ரூபாய் மட்டுமே உள்ளதாக கர்ப்பிணி பெண்ணின் கணவர் கூறியதால், ஆத்திரத்தில் அவதூறாக பேசி அடிக்க பாய்ந்த செவிலியரால் பரபரப்பு.!
கிரிக்கெட் வீரர் சுப்மன் கில் டிஸ்சார்ஜ்

உடல் நிலை சீரான நிலையில், இந்திய கிரிக்கெட் வீரர் சுப்மன் கில் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். வீட்டில் இருந்தபடியே ஓய்வெடுக்க மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர். டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ள அவருக்கு ரத்தத்தில் உள்ள தட்டணுக்கள் குறைந்து வந்ததால் சென்னையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் உடல்நிலை சற்று தேறியதால் கில் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். டெங்கு காய்ச்சல் காரணமாக உலகக் கோப்பை தொடரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் கில் பங்கேற்கவில்லை. அடுத்த போட்டியிலும் அவர் பங்கேற்க வாய்ப்பு […]
சுப்மன் கில் மருத்துவமனையில் அனுமதி

டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட இந்திய கிரிக்கெட் வீரர் சுப்மன் கில் மருத்துவமனையில் அனுமதி. சுப்மன் கில் உடலில் ரத்த தட்டை அணுக்கள் சற்று குறைந்ததை அடுத்து மருத்துவமனையில் சிகிச்சை
செந்தில் பாலாஜி மருத்துவமனையில் அனுமதி

புழல் சிறையில் இருந்த அமைச்சர் செந்தில் பாலாஜி, நெஞ்சு வலி காரணமாக ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதி.
தவறான ஊசியால் இறந்த சிறுமி? – பார்க்கிங்கில் உடலை வீசிச் சென்ற மருத்துவமனை ஊழியர்கள்

உடல்நலம் தேறிவந்த சிறுமிக்கு மருத்துவர் ஓர் ஊசிபோட்டதாகக் கூறப்படுகிறது. அந்த நிலையில், சிறுமி திடீரென இறந்துவிட்டதாகச் சொல்லப்படுகிறது. உத்தரப்பிரதேச மாநிலம், மெயின்புரியின் கிரிரோர் பகுதியில் உள்ள கர்ஹால் சாலையில் ராதா சுவாமி என்ற தனியார் மருத்துவமனை இருக்கிறது. இந்த மருத்துவமனையில், பாரதி என்ற 17 வயது சிறுமி காய்ச்சலுக்காக சிகிச்சைப் பெற்றிருக்கிறார். உடல்நலம் தேறிவந்த சிறுமிக்கு மருத்துவர் ஓர் ஊசிபோட்டதாகக் கூறப்படுகிறது. அந்த நிலையில், சிறுமி திடீரென இறந்துவிட்டதாகச் சொல்லப்படுகிறது. அதையடுத்து, அவரின் உடலை மருத்துவமனை ஊழியர்கள் […]