அமைச்சர் அன்பில் மகேஸ் மருத்துவமனையில் அனுமதி

உணவு ஒவ்வாமை காரணமாக சென்னையில் தனியார் மருத்துவமனையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் அனுமதிக்கப்பட்டுள்ளார். அமைச்சர் அன்பில் மகேஸ் நாளை காலை வீடு திரும்புவார் என்று மருத்துவமனை வட்டாரம் தகவல் தெரிவித்துள்ளது.
தனது காலில் சுட்டுக் கொண்ட பாலிவுட் நடிகர்!

பாலிவுட் நடிகர் கோவிந்தா லைசென்ஸ் உடன் கூடிய துப்பாக்கி வைத்திருக்கும் நிலையில் தவறுதலாக இன்று காலை தனது காலில் சுட்டுக் கொண்டார்.உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
நடிகர் ரஜினிகாந்த் விரைவாக குணமடைய அன்புமணி வாழ்த்து

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நடிகர் ரஜினிகாந்த் விரைவாக குணமடைய பாமக தலைவர் அன்புமணி வாழ்த்து தெரிவித்துள்ளார். நண்பர் ரஜினிகாந்த் நலமடைந்து இல்லம் திரும்ப விருப்பங்களை தெரிவித்துக் கொள்வதாக அன்புமணி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
அடி வயிறுக்கு அருகில் ரஜினிக்கு ஸ்டெண்ட்

நடிகர் ரஜினிகாந்துக்கு அடி வயிறுக்கு அருகில் ஸ்டெண்ட் வைக்கப்பட்டுள்ளது. இருதய மருத்துவர் சாய் சுதீஷ் தலைமையிலான 3 மருத்துவர்கள் சிகிச்சை அளித்துள்ளனர். விஜய் சந்தர் ரெட்டி, நரம்பியல் நிபுணர் பாலாஜி ஆகியோர் ரஜினிக்கு சிகிச்சை அளிக்கின்றனர். சிறுநீர் கழிப்பதில் பிரச்னை இருந்த நிலையில், அடி வயிறு பகுதியில் வீக்கம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
நடிகர் ரஜினிகாந்த் சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதி

பரிசோதனைக்காக இதய சிகிச்சை நிபுணரிடம் அனுமதி கேட்டிருப்பதாக தகவல் இன்று காலை மருத்துவப் பரிசோதனை நடந்ததாக தகவல் கூலி படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொண்டு வந்த நிலையில் மருத்துவப் பரிசோதனை சாதாரண பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் கவலைப்பட தேவையில்லை என்றும் அவரது மனைவி லதா ரஜினிகாந்த் தகவல்
முன்னாள் வாரியத்தலைவர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஜே.டி.பிராபகர்

நேற்று நள்ளிரவு1.00 மணியவில் இதயவலி ஏற்பட்டு சென்னை கிரிம்ஸ் ரோடுமருவத்துமனையில் அவசர பிரிவில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
செங்கல்பட்டில் 8 பேருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி

செங்கல்பட்டு மாவட்டத்தில் 8 பேருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சீதாராம் யெச்சூரி உடல்நிலை கவலைக்கிடம்

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி உடல்நிலை கவலைக்கிடம் செயற்கை சுவாசக் கருவி உதவியுடன் சீதாராம் யெச்சூரிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தகவல்
மதுரை எய்ம்ஸ் எப்போது அறிவிக்கப்பட்டது. கடந்த 5 ஆண்டுகளாக என்ன செய்துகொண்டு இருந்தீர்கள்? – உயர் நீதிமன்ற மதுரைக்கிளை கேள்வி

கட்டுமான பணிகள் எப்போது தொடங்கி, எப்போது முடியும் என்பதை ஒன்றிய அரசு எழுத்துப்பூர்வ அறிக்கையாக தாக்கல் செய்யவும் உத்தரவு. எய்ம்ஸ் கட்டுமான பணிகளை விரைந்து தொடங்க பொதுநல வழக்கு தொடரப்பட்டது.
தாம்பரம் மாநகராட்சி மேயர் வசந்தகுமாரி கமலகண்ணன் மற்றும் துணை மேயர் கோ.காமராஜ் ஆகியோர் முடிச்சூர் பகுதியில் சாலை விபத்தில் உயிரிழந்த மாநகராட்சியின் தனியார் ஒப்பந்தத் தூய்மைப்பணியாளர் தர்மண்ணா உடல் வைக்கப்பட்டுள்ள குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு சென்று, அன்னாரின் உடலுக்கு மரியாதை செலுத்தினர்