சென்னையில் நகைக் கடைகளுக்கு விடுமுறை
புயல் காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நகைக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
நவ.07ல் தூத்துக்குடிக்கு உள்ளூர் விடுமுறை
திருச்செந்தூர் கந்தசஷ்டி திருவிழாவை முன்னிட்டு நவம்பர் 7ம் தேதி தூத்துக்குடி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை. திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயில் கந்தசஷ்டி திருவிழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் நவ. 7ல் நடைபெறவுள்ள நிலையில், மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் அறிவிப்பு.
ஆயுத பூஜை தொடர் விடுமுறையையொட்டி பேருந்து மற்றும் ரயில் நிலையங்களில் மக்கள் கூட்டம் அலை மோதியது

பயணிகள் சிரமமின்றி செல்ல சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. தமிழகம் முழுவதும் வரும் திங்கட்கிழமை 23ம் தேதி ஆயுதபூஜை பண்டிகையும் மறுநாள் 24ம் தேதி விஜயதசமி பண்டிகையும் கொண்டாடப்பட உள்ளது. இந்த பண்டிகைளுக்கு முன் சனி, ஞாயிறு அரசு விடுமுறை என்பதால் தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறை கிடைக்கிறது. அரசு அலுவலகங்கள், நிறுவனங்கள், பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்படுவதால் சொந்த ஊர்களுக்கு மக்கள் அதிகம் செல்வர்.மேலும் தொடர் விடுமுறை வருவதால் பலர் சுற்றுலா செல்ல வெளியூர்களுக்கு பயணம் மேற்கொள்வர். […]
ஆயுத பூஜையையொட்டி மக்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல ஏதுவாக 22ஆம் தேதி வரை சிறப்புப் பேருந்துகள் இயக்கபடுகிறது

கூட்ட நெரிசலைத் தவிர்க்க கோயம்பேடு, தாம்பரம், பூந்தமல்லி ஆகிய மையங்களில் இருந்து பேருந்துகள் இயக்கம். வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக 2,265 சிறப்புப் பேருந்துகள் சென்னையில் இருந்து இயக்கபடுகிறது. தமிழகத்தின் பிற பகுதிகளில் இருந்து 1,700 சிறப்புப் பேருந்துகளை இயக்க போக்குவரத்துத்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
தமிழ்நாட்டில் ஆயுத பூஜை பண்டிகையை முன்னிட்டு தொடர் விடுமுறை

தமிழ்நாட்டில் ஆயுத பூஜை பண்டிகையை முன்னிட்டு தொடர் விடுமுறை காரணமாக, அரசுப் பேருந்து ஓட்டுநர்கள், மற்றும் நடத்துநர்கள் விடுப்பு எடுக்கக் கூடாது என போக்குவரத்துத் துறை சுற்றறிக்கை. மீறி விடுப்பு எடுத்தால் ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் எச்சரிக்கை.
தொடர் விடுமுறையை ஒட்டி சென்னையில் தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைப்பு

தாம்பரம் மெப்ஸ், பூவிருந்தவல்லி பைபாஸ், கோயம்பேடு ஆகிய இடங்களில் தற்காலிக பேருந்து நிலையம் பொதுமக்கள் வசதிக்காக ஞாயிறு வரை தற்காலிக பேருந்து நிலையங்களை அமைத்தது போக்குவரத்து கழகம்
ஆயுத பூஜை , சரஸ்வதி பூஜை தொடர் விடுமுறை

ஆயுத பூஜை , சரஸ்வதி பூஜை தொடர் விடுமுறையை முன்னிட்டு வரும் 20, 21 ஆகிய தேதிகளில் மெட்ரோ ரயில் சேவை இரவு 8 மணி முதல் 10 மணி வரை 6 நிமிட இடைவெளியில் இரு வழித்தடங்களிலும் ரயில்கள் இயக்கப்படும்.
செப்டம்பர் 18ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விடுமுறை

தமிழக அரசு ஏற்கனவே செப்டம்பர் 17ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விடுமுறை என்று அறிவித்திருந்தது. தற்போது பல்வேறு கோயில்களில் விநாயகர் சதுர்த்தி 18ஆம் தேதி கொண்டாடப்படுவதை தொடர்ந்து செப்டம்பர் 18ஆம் தேதி அரசு விடுமுறை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.இதனால் ஞாயிற்றுக்கிழமை விடுமுறையை தொடர்ந்து திங்கட்கிழமையும் விநாயகர் சதுர்த்தி விடுமுறையாக கிடைக்கிறது
வங்கிகளுக்கு தொடர் விடுமுறை? தவறான தகவல் என மறுப்பு

இந்த மாதம் வங்கிகளுக்கு இரண்டு முறை தொடர் விடுமுறை வருவதாக, சமூக வலைதளங்களில் பரவும் தகவலில் உண்மையில்லை என வங்கி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆக., 12 முதல், 15 வரையும், 25 முதல் 27ம் தேதிவரையும், வங்கிகளுக்கு தொடர் விடுமுறை என சமூக வலைதளங்களில் தகவல் பரவுகிறது. இதுகுறித்து வங்கி அதிகாரிகள் கூறியதாவது: ஆக., 12 இரண்டாவது சனிக்கிழமை, 13ம் தேதி ஞாயிற்றுக்கிழமை. இது, வழக்கமான விடுமுறை தான். 14ம் தேதி திங்கள்கிழமை வங்கி செயல்படும். ஆனால், […]