தென் மாநில தலைவர்கள் இந்தி கத்துக்கணும்!
இண்டியா கூட்டணி சந்திப்பில் நிதீஷ் குமார் இந்தியில் பேசும்போது திமுக எம்.பி., டி.ஆர்.பாலு மொழிபெயர்ப்பு செய்யுமாறு மனோஜ் ஜாவிடம் வேண்டுகோள் விடுத்தார். இதற்கு நிதிஷ்குமார் நாம் இந்துஸ்தானில் வாழ்கிறோம். இந்தி எங்கள் தேசிய மொழி. அதை அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும் என்றார். இதற்கு திமுக தரப்பில் இருந்து எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.
ஹிந்தி, இந்தியாவின் தேசிய மொழி என்கிறார் INDI கூட்டணியின் தலைவர்களில் ஒருவரான நிதிஷ் குமார்

ஹிந்தியை தூக்கிப்பிடித்தும், மற்ற மொழிகளை அவமானப்படுத்தியும் அந்த கூட்டத்தில் தொடர்ந்து கலந்து கொண்டிருக்கிறது தி மு க. தமிழுக்காக, தமிழர்களுக்காக, தமிழ் மொழிக்காக இருப்பதாக மார்தட்டி கொள்ளும் தி மு க, கூட்டணி கூட்டத்தில் ஹிந்தி தேசிய மொழி என்றும் மற்ற மாநிலத்தவர்களை அவதூறு செய்தும் அமைதி காத்தது ஏன்? தமிழை விட ஹிந்தி உயர்ந்தது என்றெண்ணி ஹிந்திக்கு அடிமையாகி விட்டதா தி மு க ? கூட்டணிக்காக தமிழ் மொழியை அடகு வைக்க துணிந்து விட்டதா […]