ஹில்டன் பள்ளி மாணவி S.M.ஜெயப்பிரதா நடந்த பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் (2023&2024) தமிழில் 91/100, 485/500 பெற்று பள்ளியில் இரண்டாம் இடத்தை பெற்றிருந்தார்

ஹில்டன் பள்ளி மாணவி S.M.ஜெயப்பிரதா நடந்த பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் (2023&2024) தமிழில் 91/100, 485/500 பெற்று பள்ளியில் இரண்டாம் இடத்தை பெற்றிருந்தார். மறு கூட்டலுக்குப் பிறகு தமிழ் மதிப்பெண்கள் 96/100 மாற்றப் பெற்று மொத்த மதிப்பெண்கள் 490/500 ஆக உயர்ந்தன. ஆகவே அவர் முதல் இடத்தை அடைந்தார். இதனை பெருமை கொள்ளும் வகையில், ஹில்டன் பள்ளியின் தாளாளர், தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் மற்றும் அனைத்து பணியாளர்களும் வாழ்த்து தெரிவித்தனர்.
பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு, ஹில்டன் பள்ளி மாணவர்கள் தேர்தலில் வாக்கு அளிக்கும் முக்கியத்துவத்தையும், ஜனநாயக கடமை ஆற்றும் விழிப்புணர்வையும் ஏற்படுத்தும் வகையில் பதாகைகளை ஏந்தி நின்ற காட்சி
ஹில்டன் பள்ளியில் பிரெஞ்ச் பயின்றவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி பள்ளியில் முதல்வர் தலைமையில் நடைபெற்றது. இதில் 3&ஆம் வகுப்பு முதல் 8&ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் பிரெஞ்ச் மொழியின் ஆசிரியை திருமதி.பவானி மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டு சான்றிதழ்களை வழங்கினர்.
ஹில்டன் பள்ளியில் மழலையர் மற்றும் முதன்மை வகுப்புகளுக்கான விளையாட்டு நிகழ்ச்சி நடைபெற்றது

இந்நிகழ்ச்சியினை தேசிய சாம்பியன் நீச்சல் வீரர் அபாசுதின் தலைமை ஏற்று மற்றும் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசினை வழங்கினார். பள்ளியின் முதல்வர் செ.பாலாஜி, உடற்பயிற்சி ஆசிரியர் மற்றும் அனைத்து ஆசிரியர்கள் முன்னிலையில் விழா இனிதே நடைபெற்று முடிந்தது.