இல்லாதவர்களுக்கு உதவ படூர் ஊராட்சியில் அன்பு குடில் திறப்பு

தமிழகத்திலேயே முதல் முறையாக ஊராட்சி பகுதியில் இருப்பவர்கள் கொடுப்பதை இல்லாதவர்கள் பெற்றுக் கொள்ளும் வகையில் அன்புக்குடில் எனும் உதவும் கரங்களின் சேவை மையம் திமுக படூர் ஊராட்சி மன்ற அலுவலகம் அருகே இன்று திறந்து வைக்கப்பட்டது. செங்கல்பட்டு மாவட்டம் படூர் ஊராட்சி சென்னையை அடுத்து வளர்ந்து வரும் பகுதியாக உள்ளது இங்கே பல அடுக்குமாடி குடியிருப்புகள், தொழில் துறை நிறுவனங்கள் அமைந்துள்ளது. இங்கு வசிக்கும் அடுக்கு மாடி குடியிருப்பு வாசிகளும் பொதுமக்களும் தங்களுக்கு தேவை போக மீதமுள்ள […]

மணிமங்கலம் மாற்றுதிறனாளி குடிசை வீடு எரிந்து சாம்பல்

மணிமங்கலம் அருகே தீ விபத்தால் முற்றிலுமாக வீடு எரிந்து வாழ்வாதாரம் பாதிக்கபட்ட தாய் மற்றும் அவரின் மாற்றுதிறனாளி மகனுக்கு உதவி கரம் நீட்டிய போலீசார், அப்பகுதியினர் பாராட்டு சென்னை மணிமங்கலம் அடுத்த கரசங்கால் எல்.ஐ.சி காலணியை சேர்ந்தவர் செல்வி வீட்டு வேலை செய்து வருகிறார். இவருடைய மாற்றுதிறனாளி மகன் சதீஷ் கூலி வேலை செய்து வருகிறார். நேற்று இருவரும் வழக்கம் போல் வேலைக்கு சென்ற நிலையில் மதியம் திடிரென குடிசை வீடு பற்றி எரிய தொடங்கியுள்ளது. இதனை […]

புயலில் பாதிக்கப்பட்ட இருளர் குடும்பங்களுக்கு நிவாரண உதவி

புயல் மழையால் பாதிக்கப்பட்ட கேளம்பாக்கம் அடுத்த புதுப்பாக்கம் இருளர் குடியிப்பு, கலைஞர் நகரை சேர்ந்த தூய்மை பணியார் என 100 க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு புதுப்பாக்கம் ஊராட்சிமன்ற தலைவர் ஆறுமுகம் ஏற்பாட்டில் திருப்போரூர் ஒன்றியகுழு தலைவர் எல்.இதயவர்மன் அரிசி, மளிகை பொருட்கள், பிஸ்கெட் உள்ளிட்ட நிவாரண பொருட்களை வழங்கினார்.