தமிழ்நாட்டில் நாளை மறுநாள் முதல் வெப்பம் குறையும்
வங்கக்கடலில் ஆந்திரா, வடதமிழகம் ஒட்டி காற்று சுழற்சி உருவாக வாய்ப்பு உள்ளதால் வரும் 10 ஆம் தேதி முதல் 3, 4 நாட்கள் தமிழகத்தில் சிறப்பான இடிமழை வாய்ப்பு உருவாகலாம். குறிப்பாக வட உள் மாவட்டங்கள் மற்றும் வட கடலோர மாவட்டங்களில் பெரும்பாலான பகுதிகள் முதல் பரவலான இடிமழைக்கும் ஆங்காங்கே கனமழைக்கும் ஒரு சில பகுதிகளில் மிக கனமழைக்கும் வாய்ப்பு உருவாகலாம் . மேலும் மேற்கு மாவட்டங்களின் காற்று மறைவு பகுதிகள் (மேற்கு காற்று வீசும் பகுதிகள் […]
தமிழ்நாட்டில் மீண்டும் 108 டிகிரி பாரன்ஹீட் வெயில் சுட்டெரிக்கும் என்று தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் கூறியுள்ளார்

கடந்த வாரத்தில் கனமழை பெய்து வந்த நிலையில் இந்த வாரம் வெயில் சுட்டெரிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. ராணிப்பேட்டை, வேலூர், மாவட்டங்களில் வெயில் 108 டிகிரி பாரன்ஹீடை தாண்டி கொளுத்தும் எனவும், மற்ற மாவட்டங்களில் வெயில் குறைந்து காணப்படும் எனவும் பிரதீப் ஜான் கூறியுள்ளார். கன்னியாகுமரி மாவட்டத்தில் மழையை எதிர்பார்க்க முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.
ராஜஸ்தானில் கடந்த 3 நாட்களில் மட்டும் 22 பேர் வெப்ப அலை காரணமாக உயிரிழந்துள்ளனர்

நாட்டிலேயே அதிகபட்சமாக ராஜஸ்தானில் பலோடி நகரில் 122 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவானது
1896 பிறகு திருச்சியில் 43.1 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவானது

43.1 டிகிரி செல்சியஸைத் தொட்டு, 1888-க்குப் பிறகு இரண்டாவது அதிக வெப்பமான நாளாக நகரம் பதிவு செய்யப்பட்டது. திருச்சியின் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 4.7 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருந்தது, இது மே 2, 1896 இல் பதிவுசெய்யப்பட்ட 43.3 டிகிரி செல்சியஸ் என்ற சாதனைக்கு மிக அருகில் வந்தது, இது சென்னை மண்டல வானிலை ஆய்வு மையத்தின் (RMC) இணையதளத்தில் பட்டியலிடப்பட்டுள்ள தீவிர வானிலை நிகழ்வுகளின் தரவுகளின்படி. “1888 இல் இருந்து கிடைக்கும் தரவுகளின்படி, […]
“மே 1 முதல் வெப்ப அலை உச்சத்தை தொட வாய்ப்பு”

வட உள் தமிழ்நாட்டில் மே 1 முதல் 4 ஆம் தேதி வரை வெப்பஅலை உச்சத்தை தொட வாய்ப்புகாஞ்சிபுரம், திருவள்ளூர், சேலம், ஈரோடு, நாமக்கல், திருச்சி,கரூர் ஆகிய மாவட்டங்களில் வெப்ப அலை வீசும்– தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான்
5 நாட்களுக்கு வெப்பம் அதிகரிக்க வாய்ப்பு

தமிழகத்தில் ஏப்.8ம் தேதி வரை 5 நாட்களுக்கு வெப்பம் அதிகரித்தே காணப்படும். கர்நாடகா, கேரளா கடலோரப் பகுதிகளிலும் 5 நாட்களுக்கு அதிக வெப்பநிலை நீடிக்கும். வடக்கு உள் கர்நாடகா, ஒடிசா, மேற்குவங்கம், ஆந்திரா மாநிலங்களிலும் வெப்ப அலை வீசும் – வானிலை ஆய்வு மையம்.