பிரபல குணச்சித்திர நடிகரும், இயக்குனருமான மாரிமுத்து மாரடைப்பால் மரணம்

ஜெயிலர், பரியேறும் பெருமாள் உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்து பிரபலமானவர், மாரிமுத்து. சென்னை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் நடிகர் மாரிமுத்துவின் உடல் வைக்கப்பட்டுள்ளது. தேனி மாவட்டத்தில் உள்ள அவரது சொந்த ஊரான வருசநாடு பகுதிக்கு உடல் கொண்டு செல்லப்பட உள்ளது.