இஸ்ரேல்- ஹமாஸ் யுத்தம் தொடங்கியதிலிருந்து 23157 பாலஸ்தீனர்கள் இதுவரை கொல்லப்பட்டுள்ளனர்

அக்டோபர் 7ஆம் தேதி தொடங்கிய யுத்தம் இன்னும் முடியவில்லை.காசா மற்றும் மேற்கு கரையோர பகுதிகளிலும் பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டு வருகிறார்கள்.தற்போது தெற்கு காசா பகுதியில் இஸ்ரேல் தாக்குதல் தீவிரமாகியுள்ளது

இஸ்ரேல் ஹமாஸ் தற்காலிக போர் நிறுத்த ஒப்பந்தம் அமலுக்கு வந்தது

இந்திய நேரப்படி இன்று மாலை 7:30 மணிக்கு முதல் கட்ட பிணைக் கைதிகள் விடுவிக்கப்படுவார்கள். காசாவில் இருந்து முதல் நாளான இன்று 13 பிணைக் கைதிகள் விடுவிக்கப்படுகிறார்கள். 4 நாட்களில் 50 பிணைக் கைதிகளை விடுவிக்க ஹமாஸ் முடிவு.

வெளிநாட்டு பிணைக் கைதிகளை விடுவிக்க ஹமாஸ் முடிவு

இஸ்ரேலுக்குள் கடந்த 7-ந் தேதி புகுந்து தாக்குதலை நடத்திய ஹமாஸ் அமைப்பினர் வெளிநாட்டினர் உள்பட ஏராளமானோரை பிணைக் கைதிகளாக பிடித்து சென்றனர். சமீபத்தில் அமெரிக்கா, இஸ்ரேலை சேர்ந்த 4 பெண் பிணைக் கைதிகளை ஹமாஸ் விடுவித்தனர். இந்த நிலையில் வெளிநாட்டு பிணைக் கைதிகளை விடுவிக்க ஹமாஸ் முடிவு செய்துள்ளது. இதுதொடர்பாக ஹமாஸ் படை பிரிவின் செய்தி தொடர்பாளர் அபு உபைடா வெளியிட்ட வீடியோவில், வரும் நாட்களில் பல வெளிநாட்டு பிணைக் கைதிகளை விடுவிக்க உள்ளோம். காசாவில் தரைவழி […]

காஸா புதைகுழியாக மாறும்: ஹமாஸ் சூளுரை!

இஸ்ரேல் – ஹமாஸ் இடையே களத்தில் நேரடியாக மோதல்தொடங்கியிருக்கும் நிலையில் இருபக்கமும் கணிசமான பாதிப்புகள் ஏற்பட்டு வருகின்றன. ஹமாஸின் ஆயுதக் குழு, செவ்வாய்கிழமை (அக்.31) வெளியிட்டுள்ள குறிப்பில் தங்களின் பிடியில் இருக்கும் வெளிநாட்டவர் சிலரை இன்னும் சில நாள்களில் விடுவிப்பதாகவும் தரைவழியே முன்னேற தொடங்கியிருக்கும் இஸ்ரேல் ராணுவத்துக்கு காஸா மரணக்குழியாக மாறும் எனவும் தெரிவித்துள்ளது. “இடையீட்டாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளோம். வெளிநாட்டவர் சிலரை இன்னும் சில நாட்களில் விடுதலை செய்வோம். எதிரிகளின் படைவீரர்கள், அரசியல் மற்றும் ராணுவ தலைமை […]

அக். 7 தாக்குதலில் தொடர்புடைய ஹமாஸ் படைத் தளபதி மரணம்: இஸ்ரேல்

காஸாவின் ஜாபாலியா அகதிகள் முகாமில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஹமாஸ் படையின் முக்கிய தளபதி உயிரிழந்ததாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இஸ்ரேல் மீது காஸாவின் ஹமாஸ் படையினர் கடந்த அக். 7 ஆம் தேதி தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து இரு தரப்புக்கும் இடையே போர் 25 நாள்களை எட்டியதுடன் தீவிரமடைந்தும் வருகிறது. வான்வழித் தாக்குதலில் ஈடுபட்டிருந்த ஹமாஸ், தற்போது தரைவழித் தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது. கடந்த 4 நாள்களாக எல்லைப் பகுதிக்குள் தாக்குதல் நடத்தியவாறு கொஞ்சம் கொஞ்சமாக காஸாவுக்குள் […]

ஹமாஸ் அமைப்பு முக்கிய தலைவர் உயிரிழப்பு

இஸ்ரேல் ராணுவம் நடத்திய வான்வழி தாக்குதலில் ஹமாஸ் அமைப்பின் முக்கிய தலைவர் ஒசாமா மசினி உயிரிழப்பு. ஹமாஸின் முக்கிய தலைவர் ஒசாமா அல் மசினியின் வீட்டை குறிவைத்து தாக்கியதில் உயிரிழப்பு – இஸ்ரேல் ராணுவம்.

இஸ்ரேல் – ஹமாஸ் போர் | ‘ஒற்றுமை அரசு’ அமைத்த நெதன்யாகு; கவலைக்குரிய காசா நிலை!

டெல் அவிவ்: காசாவில் ஹமாஸுடனான போருக்கு மத்தியில் இஸ்ரேலில் எதிர்க்கட்சியுடன் இணைந்து போர்க்கால ஒற்றுமை அரசை அமைத்துள்ளார் அந்நாட்டின் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு. இதனிடையே, இஸ்ரேல் தாக்குதலால் கடும் பாதிப்புக்குள்ளான காசாவின் நிலை கவலைக்குரியதாக உள்ளது. அதன்படி, புதிய போர்க்கால அமைச்சரவையில் பிரதமர் நெதன்யாகு, அந்நாட்டின் எதிர்க்கட்சிப் பிரமுகரும், முன்னாள் பாதுகாப்பு அமைச்சருமான பென்னி காண்ட்ஸ் மற்றும் இஸ்ரேலின் தற்போதைய பாதுகாப்பு அமைச்சர் யோவ் கேலண்ட் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இந்த அமைச்சரவை தற்போது நடந்து வரும் போர் […]