திண்டுக்கல்லில் போலீசாரிடமிருந்து தப்ப முயன்ற வாலிபருக்கு துப்பாக்கி சூடு
திண்டுக்கல்லில் வாலிபர் இர்பான் கொலை வழக்கில் தொடர்புடைய ரிச்சர்ட் சச்சின் போலீசாரை தாக்கி தப்ப முயன்ற போது தனிப்படை போலீசார் முழங்காலில் சுட்டு பிடித்தனர். படுகாயம் அடைந்த வாலிபர் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். ரவுடி தாக்கியதில் காவலர் அருண் என்பவர் படுகாயம்
தனது காலில் சுட்டுக் கொண்ட பாலிவுட் நடிகர்!

பாலிவுட் நடிகர் கோவிந்தா லைசென்ஸ் உடன் கூடிய துப்பாக்கி வைத்திருக்கும் நிலையில் தவறுதலாக இன்று காலை தனது காலில் சுட்டுக் கொண்டார்.உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் வடமாநில கொள்ளையன் பலி
குமாரபாளையம் அருகே கண்டெய்னரில் பதுங்கிய வடமாநில கொள்ளையர்கள் மீது போலீஸ் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலியானார். கேரளாவில் இருந்து வந்த கண்டெய்னரை போலீஸ் மடக்கியபோது, 6 கொள்ளையர்கள் தாக்க முயன்றுள்ளனர். தற்காப்புக்கு போலீசார் துப்பாக்கியால் சுட்டதில் ஒருவர் பலியானார். கண்டெய்னரில் இருந்தது, கேரள கொள்ளை பணம் எனத் தெரிய வந்துள்ளது