சென்னை கிண்டி அரசு மருத்துவமனையில் மருத்துவர் பாலாஜி தாக்கப்பட்ட சம்பவத்தை கண்டித்து, தமிழ்நாடு முழுவதும் இந்திய மருத்துவர் சங்கத்தினர் இன்று ஒரு நாள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்

மாநிலம் முழுவதும் 7900 மருத்துவமனைகள், 45,000 மருத்துவர்கள் இந்த போராட்டத்தில் பங்கேற்று உள்ளதாக இந்திய மருத்துவர்கள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். இதனால் புற நோயாளிகள் சிகிச்சை பிரிவு இன்று நிறுத்தப்பட்டுள்ளது. அவசர சிகிச்சை பிரிவு மட்டும் வழக்கம் போல் செயல்படுகிறது.

சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகைக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த கள்ளக்குறிச்சியைச் சேர்ந்தவர் கைது செய்யப்பட்டார்

சென்னை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தொலைபேசியில் அழைத்து ஆளுநர் மாளிகையில் வெடிகுண்டு இருப்பதாக மிரட்டல் தெரிவித்துள்ளார். வெடிகுண்டு நிபுணர்களுடன் சென்று ஆளுநர் மாளிகையில் போலீசார் நடத்திய சோதனையில் புரளி என தெரியவந்தது.

பிரதமர் நரேந்திர மோடி, நேற்று சென்னை வந்ததால் கிண்டியில் இருந்து பல்லாவரம் வரை கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது

இந்த நெரிசல் காரணமாக வாகனங்களில் சென்னை விமான நிலையம் வந்த பயணிகள் பலர், பாதி வழியில் சிக்கினர். பயணிகள் வர தாமதமானதால், நேற்று மாலை 6 மணியிலிருந்து, இரவு 9.30 மணி வரையில் மொத்தம் 15 விமானங்கள் சுமார் அரை மணி நேரத்தில் இருந்து ஒரு மணி நேரம் வரை தாமதமாக புறப்பட்டு சென்றன.சர்வதேச விமானங்களான குவைத், தோகா, மற்றும் உள்நாட்டு விமானங்கள் மும்பை, திருவனந்தபுரம், கவுஹாத்தி, பெங்களூர், கோவை, டெல்லி, கொல்கத்தா உள்ளிட்ட 13 உள்நாட்டு […]