திருச்செந்தூர் கடலில் குளிக்க கட்டுப்பாடு
திருச்செந்தூர் முருகன் கோவிலில் கடற்கரையில் பக்தர்கள் குளிப்பது வழக்கம். தற்போது அந்த கடற்கரை பகுதியில் தொடர்ந்து கடல் அரிப்பு ஏற்பட்டு வருகிறது. இதனால் பாறைகள் வெளியே தெரிகின்றன. எனவே பக்தர்கள் நீண்ட நேரம் குளிக்க கூடாது. வயதானவர்கள் தனியாக குளிக்கக் கூடாது என்று கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.கடற்கரையில் பக்தர்கள் குளிக்கும் பகுதியில் தடுப்பு கட்டை கட்டி வைத்துள்ளனர்
எம்ஜிஆர் வடிவத்தில் விஜய் – செங்கோட்டையன் பேச்சு
ஈரோட்டில் இன்று தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் கலந்து கொண்ட பிரம்மாண்ட கூட்டம் நடந்தது இந்த கூட்டத்தில் செங்கோட்டையன் கலந்து கொண்டு பேசும்போது எம்ஜிஆர் வடிவத்தில் விஜயை பார்க்கிறேன் என்று தெரிவித்தார்
எலான் மஸ்க் சொத்து மதிப்பு 58 லட்சம் கோடி
அமெரிக்க பிரபல தொழிலதிபர் எலான் மஸ்க் பல்வேறு தொழில்களில் முன்னணியில் இருக்கிறார் குறிப்பாக விண்வெளி தொழில்நுட்பத்தில் அமெரிக்க அரசுக்கு இணையாக தனியாக நிறுவனம் நடத்துகிறார் அவரது சொத்து மதிப்பு 58 லட்சம் கோடி என்று அறிவிக்கப்பட்டது உலகின் முதல் பணக்காரர் என்ற அந்தஸ்தை அவர் பெற்றுள்ளார்
திருப்பரங்குன்றம் தீபத்தூண்- அரசு உறுதி
திருப்பரங்குன்றம் பிரச்சனை தொடர்பாக மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு நடந்து வருகிறது. இந்த வழக்கில் தமிழக அரசு இன்று வாதாடும்போது திருப்பரங்குன்றம் மலை உச்சியில் இருப்பது தீபத்தூண் என்பதற்கான எந்த ஆதாரமும் இல்லை 1920 இல் நடந்த ஆய்விலும் இந்த தூண் குறிப்பிடப்படவில்லை என்று கூறியுள்ளது
கிராம வேலை வாய்ப்பு திட்ட புதிய மசோதா நிறைவேற்றம்
கிராம மக்களுக்காக 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தை காங்கிரஸ் ஆட்சியில் கொண்டு வந்தனர் இதற்கு மகாத்மா காந்தி வேலை உறுதி அளிப்பு திட்டம் என்று பெயரிடப்பட்டு இருந்தது. தற்போது 125 நாள் வேலை நாளாக மாற்றி மத்திய அரசு புதிய சட்டத்தை கொண்டு வந்துள்ளது.இதில் மகாத்மா காந்தி பெயர் நீக்கப்பட்டுள்ளது இந்த சட்டம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது .அப்போது கடும் அமளி ஏற்பட்டது
ஈரோடு கூட்டம் விஜய் வெளியீட்ட வீடியோ
தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய் இன்று ஈரோட்டில் நடந்த பிரம்மாண்ட கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார் கூட்டம் முடிந்த போது அவர் செல்பி வீடியோ எடுத்தார் அதை அவர் தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார் இந்த வீடியோ வைரலாகி வருகிறது
சிட்லபாக்கம் பெருமாள் கோவிலில் குடமுழக்கு விழா
சென்னை அடுத்த சிட்லப்பாக்கத்தில் அமைந்துள்ள 100 ஆண்டுகள் பழமையான அருள்மிகு ஆனந்தஜோதி விநாயகர் மற்றும் பதமாவதி உடனுறை சீனிவாசபெருமாள் கோயில் குடமுழுக்கு விமரிசையாக நடைபெற்றது சிட்லப்பாக்கம் ஜோதிநகரில் 100 ஆண்டுகள் பழமையான அருள்மிகு ஆனந்தஜோதி விநாயகர் மற்றும் பதமாவதி உடனுறை சீனிவாசபெருமாள் கோவில் குடமுழுக்கு வெகு விமரிசையாக நடைபெற்றது, கடந்த மூன்று நாட்களாக நடைபெற்ற யாகசாலை பூஜைகள் நடைபெற்று மகா பூர்ணாஹீதி நடைபெற்று புனித கலசநீரை மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு கோபுரகலசங்களுக்கு குடமுழுக்கு செய்யப்பட்டது, […]
செங்கல்பட்டு மாவட்டத்தில் ஏழு லட்சம் வாக்காளர் நீக்கம்
செங்கல்பட்டு மாவட்டத்தில் தாம்பரம், பல்லாவரம், சோழிங்கநல்லூர், மதுராந்தகம், செய்யூர், செங்கல்பட்டு, திருப்போரூர் ஆகிய 7 சட்டப்பேரவை தொகுதிகள் உள்ளன. மொத்தமுள்ள 27,87,362 வாக்காளர்களில் 7,01,901 வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன. இரட்டைப் பதிவு, இறந்தவர்கள் மற்றும் இடம்பெயர்ந்த வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டதால், வாக்காளர் எண்ணிக்கை 20,85,464 ஆகக் குறைந்துள்ளது. இது மொத்த வாக்காளர்களில் 25.18% ஆகும்.
டெல்லி பனிமூட்டம் வாகன விபத்துகளில் 13 பேர் உயிரிழப்பு
யமுனா விரைவு சாலையில் கடும் பனி மூட்டம் காரணமாக வாகனங்கள் அடுத்தடுத்து மோதி பேருந்து தீப்பிடித்து எரிந்ததில் 13 பேர் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி, உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். டெல்லி உள்ளிட்ட வட மாநிலங்களில் கடும் பனிப்பொழிவு தொடங்கி உள்ளது. இதனால் அதிகாலையில் சாலையில் முன்னால் செல்லும் வாகனங்கள் பார்வைக்கு தெரியாத நிலை உள்ளது.
தங்கம் விலை மேலும் உயரும்
தங்கம் வெள்ளி விலை ஜெட் வேகத்தில் உயர்ந்து கொண்டே செல்வது பொதுமக்களை கவ லையில் உறைய வைத்துள்ளது. இதனால் திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகளை வைத்திருப்ப வர்களுக்கு தங்கம் விலை உயர்வு தீராத தலைவலியை கொடுத்து ருக்கிறது. இதுகுறித்து சென்னை வைரம் மற்றும் தங்கம் வியாபாரிகள் சங்க செயலாளர் கோல்டுகுரு சாந்தகுமார் கூறியதாவது:- அமெரிக்கா வட்டி விகிதத்தை குறைத்ததே இதற்கு முக்கிய காரணம். இதனால் வைப்பு நிதியில் முதலீடு செய்த வர்கள் பலரும் தங்கத்தின் மீது தங்களது […]