அரசு ஊழியர் போராட்டம் – அமைச்சர் பேச்சு வார்த்தை
தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் சங்கங்களின் பல்வேறு கோரிக்கைகள் குறித்து வரும் 22.12.2025 அன்று காலை 10.00 மணிக்கு சென்னை, தலைமைச் செயலகம், நாமக்கல் கவிஞர் மாளிகையில் உள்ள 10-வது தளத்தில் உள்ள ஆலோசனைக் கூடத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் சங்க நிர்வாகிகளுடன் பொதுப் பணித்துறை அமைச்சர் எ.வ. வேலு, நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர்.”
தங்கம் விலையில் குறைவு
இன்று 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.60 குறைந்து ஒரு கிராம் ரூ.12,380க்கும் சவரனுக்கு ரூ.480 குறைந்து ஒரு சவரன் ரூ.99,040க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
உலகக்கோப்பை கால்பந்து அணிக்கு ரூ.450 கோடி பரிசு
நடப்பு சாம்பியன் அர்ஜென்டினா, பிரேசில், பிரான்ஸ், ஸ்பெயின், ஜெர்மனி உட்பட 48, அணிகள் பங்கேற்கும் 23-வது ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து தொடர் வரும் 2026-ம் ஆண்டு ஜூன் 11 முதல் ஜூலை 19 வரை அமெரிக்கா, கனடா, மெக்சிகோ ஆகிய 3 நாடுகளில் நடைபெறுகிறது. இந்த தொடருக்கான பரிசுத்தொகையை ஃபிபா அறிவித்துள்ளது. இதன்படி தொடருக்கான மொத்த பரிசுத்தொகை சுமார் ரூ.6 ஆயிரம் கோடியாகும். சாம்பியன் பட்டம் வெல்லும் அணி ரூ.450 கோடியை பரிசாக அள்ளிச்செல்லும். 2022-ம் […]
தில்லி – ஷாங்காய் இடையே நாள்தோறும் நேரடி விமான சேவை! ஜன.2 முதல்!
தில்லியில் இருந்து சீனாவின் ஷாங்காய் நகரத்துக்கு, வரும் ஜன.2 ஆம் தேதி முதல் நாள்தோறும் நேரடி விமானங்கள் இயக்கப்படும் என சீன தூதரகம் அறிவித்துள்ளது
ஸ்பீக்கர் டவரில் ஏறி விஜயிடம் பறக்கும் முத்தம் கேட்ட தொண்டர்
ஈரோட்டில் நடந்த விஜய் பொதுக்கூட்டத்தில் ஒரு தொண்டர் ஸ்பீக்கர் டவரில் ஏறி உட்கார்ந்து கொண்டு பறக்க முத்தம் கேட்டார் நீ பார்த்த விஜய் நீங்கள் கீழே இறங்கினால் தான் முத்தம் தருவேன் என்று கூறினார். பலமுறை விஜய் இவ்வாறு கூறிய பிறகு அந்த தொண்டர் கீழே இறங்கினார்
சார் பேசினால் சினிமா வசனம் இல்லையாம், சிலப்பதிகாரத்திலிருந்து எடுத்ததாம்… தவெக தலைவர் விஜய்.
“அண்மையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் முதல்வர் அவர்கள் பேசும்போது, “என் கேரக்டரையே புரிஞ்சிக்க மாட்டேங்கிறீங்களே” எனக் கூறினார். நான் பேசினால் மட்டும் சினிமா வசனமாம், சார் பேசினால் சினிமா வசனம் இல்லையாம்… சிலப்பதிகாரத்திலிருந்து எடுத்ததாம்!” – தவெக தலைவர் விஜய்
இன்றுடன் விடைபெறும் வடகிழக்கு பருவமழை.
நாளை முதல் தமிழகத்தில் வறண்ட வானிலை நிலவும், இந்த மாதம் இறுதி வரை பெரிதாக மழைக்கு வாய்ப்பு ஏதும் தென்படவில்லை,மீண்டும் ஜனவரி மாதம் குளிர்கால மழை வாய்ப்பு உருவாக்கலாம். தமிழகத்தில் நாளை முதல் பனியின் தாக்கம் அதிகரிக்கும். இலங்கைக்கு தெற்கு பகுதிகளில் நிலவி வரும் காற்று சுழற்சியின் காரணமாக அடுத்து வரும் 3, 4 நாட்களுக்கு இலங்கையில் பெரும்பாலான பகுதிகள் முதல் பரவலான மழையும் ஆங்காங்கே கனமழையும் தொடரும் வாய்ப்பு உள்ளது.
ஈரோடும் மஞ்சளும் – விஜய் விளக்கம்
ஈரோடு கூட்டத்தில் விஜய் பேசும்போது மஞ்சள்… பொதுவா.. நல்ல காரியம் ஆரம்பிக்கும் போது மஞ்சள் வச்சிதான் ஆரம்பிப்பாங்க.. நம்ம வீட்டில் கூட அம்மா, அக்கா, தங்கைகள், நமக்காக நாம நல்லா இருக்கனும் என்பதுதான் மஞ்சள் கட்டித்தான் வேண்டிப்பாங்க.. மங்களகரமான மஞ்சள் விளையும் பூமிதான் ஈரோடு. அதுமட்டும் இல்லை.. இங்க ஒரு மகத்தான ஒரு மனிதர் பற்றி பேசியே ஆகணும்.. ஈரோடு மண்.. விவசாயத்திற்கு பெயர்போன மண்.. எனக்கு நீங்கள் மிகப்பெரிய நம்பிக்கை கொடுத்து இருக்கிறீங்க… நீங்க என்ன […]
125 நாள் வேலை திட்டம் – எடப்பாடி மீது ஸ்டாலின் பாய்ச்சல்.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்துக்கு மத்திய அரசு மூடுவிழா நடத்துவதற்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆதரவு தெரிவிப்பது மன்னிக்க முடியாத பச்சை துரோகம் என்று மு.க. ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக திமுக தலைவரும் முதல்வருமான மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ‘‘ஏழைகளின் வயிற்றில் அடிக்கிறது ஒன்றிய பா.ஜ.க.; அதற்கு ஒத்து ஊதுகிறார் திருவாளர் பழனிசாமி!
திமுக தீய சக்தி , த.வெ.க தூய சக்தி -விஜய் பேச்சு
தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய் இன்று ஈரோட்டில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசியதாவது-24 மணி நேரமும் விஜயை எப்படி மடக்கலாம்; தவெகவை எப்படி முடக்கலாம் என்றுதான் நினைக்கிறார்கள். தனிப்பட்ட முறையில் அசிங்கமாக பேசுவது தான் அரசியல் என்றால் அது எனக்கு வராது. நான் எத்தனை நிமிஷம் பேசினால் என்ன? எப்படி பேசினால் என்ன? விஷயம் என்ன என்று பாருங்கள். நாங்கள் வாயிலேயே வடை சுட திமுகவா… தவெக. திமுக ஒரு தீயசக்தி. தவெக ஒரு தூயசக்தி” இவ்வாறு […]