தமிழ்நாட்டில் என்.டி.ஏ. கூட்டணி ஆட்சி அமைக்கும் – மத்திய அமைச்சர் பியூஸ் கோயல்

தேசிய ஜனநாயக கூட்டணிக்கு தேசிய அளவில் மோடியும் தமிழ்நாட்டில் பழனிசாமியும் தலைவர்களாக இருப்பார்கள். தமிழ்நாட்டில் என்.டி.ஏ. கூட்டணி ஆட்சி அமைக்கும். தேசிய ஜனநாயக கூட்டணி முழுமையாக திமுக அரசை அகற்றும் – மத்திய அமைச்சர் பியூஸ் கோயல். திமுக குடும்ப ஆட்சியில் உழவர்கள், பெண்கள், இளைஞர்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னை பசுமைவழிச் சாலை இல்லத்தில் இபிஎஸ் – பியூஷ் கோயல் கூட்டாக பேட்டி.

கரூரில் நிகழ்ந்த துயர சம்பவம் துரதிர்ஷ்டவசமானது – உச்ச நீதிமன்றம் வேதனை

கரூர் தவெக கூட்ட நெரிசல் சம்பவம் துரதிர்ஷ்டவசமானது; அதில் தலையிட்டு எந்தக் கருத்தும் கூற விரும்பவில்லை. பரப்புரைக் கூட்டத்துக்கு வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்கக் கோரிய வழக்கில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கருத்து.

ஆகஸ்ட் வரை கடும் குளிர் ஏற்படுமா? – வாட்ஸ்அப்பில் வரும் தகவலின் உண்மை என்ன?

கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்கள், குறிப்பாக வாட்ஸ்அப்பில் பரவி வரும்“Aphelion காரணமாக ஆகஸ்ட் மாதம் வரை கடும் குளிர் நிலவும்” என்ற தகவல் முழுமையாக பொய்யானது என வானிலையாளர் முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன் தெளிவுபடுத்தியுள்ளார். வாட்ஸ்அப்பில் பரவும் தகவல்களில், Aphelion என்பது ஒரு கோள் என்றும், அது சூரியனைச் சுற்றி வருவதால் பூமி அதிக தூரம் சென்று கடும் குளிர் ஏற்படும் என்றும் கூறப்படுகிறது. இது அறிவியலுக்கு முற்றிலும் எதிரான தவறான தகவல் என வானிலையாளர் […]

4 நாட்கள் வங்கி சேவை முடங்கும் அபாயம்..! நாடு முழுவதும் வரும் 27ல் வங்கி ஊழியர்கள் ஸ்டிரைக்..!

வாரத்தில் 5 நாட்கள் மட்டுமே வேலை என்ற கோரிக்கையை வலியுறுத்தி வரும் 27ஆம் தேதி நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் ஸ்டிரைக் அறிவிப்பு. கோரிக்கையை நிறைவேற்ற சம்மதித்தால் நாள்தோறும் 40 நிமிடங்கள் கூடுதல் நேரம் பணி செய்வதாகவும் ஒப்புதல். வரும் 24ஆம் தேதி 4வது சனிக்கிழமை, 25ஆம் தேதி ஞாயிறு, 26ஆம் தேதி குடியரசு தின விடுமுறை, அதற்கு அடுத்த நாளான 27இல் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளதால் 4 நாட்கள் வங்கி சேவை முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,720 குறைந்தது.

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,720 குறைந்து ரூ.1,13,600-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.215 குறைந்து ரூ.14,200-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5 குறைந்து ஒரு கிராம் ரூ.340க்கு விற்பனை செய்யப்படுகிறது.

டிரம்ப் பயணித்த விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு…

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் பயணித்த Air Force One விமானம், சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் நடைபெறும் உலக பொருளாதார மன்றத்தில் பங்கேற்பதற்காக புறப்பட்ட நிலையில், பயணத்தின் போது சிறிய மின்சார கோளாறு கண்டறியப்பட்டது. இதையடுத்து, பாதுகாப்பு முன்னெச்சரிக்கையாக விமானம் வாஷிங்டனில் உள்ள Joint Base Andrews விமான நிலையத்துக்கு திரும்பி தரையிறங்கியது. விமானம் புறப்பட்ட 30–40 நிமிடங்களுக்குள் “சிறிய மின்சார பிரச்சினை” கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து, விமானக் குழு இந்த முடிவை எடுத்ததாக வெள்ளை மாளிகை தரப்பில் […]

“உதயநிதி ஸ்டாலினின் சனாதன பேச்சு வெறுப்புப் பேச்சே”: உயர்நீதிமன்ற மதுரை கிளை

சனாதன தர்மம் குறித்து உதயநிதி ஸ்டாலின் 2023ஆம் ஆண்டு வெளியிட்ட கருத்துகள் வெறுப்பு பேச்சு (Hate Speech) ஆகும் என்றும், அது இந்துமதத்திற்கு எதிரான வெளிப்படையான தாக்குதல் என்றும் உயர் நீதிமன்ற மதுரை அமர்வு தெரிவித்துள்ளது. உதயநிதி ஸ்டாலின் கருத்துகள் இனப்படுகொலை (Genocide) மற்றும் பண்பாட்டு அழிப்பு (Culturicide) என்ற உணர்வுகளை உருவாக்குவதாகக் கூறி, அவை வெறும் அரசியல் விமர்சனமாக மட்டுமே பார்க்க முடியாது என்ற கருத்தையும் நீதிமன்றம் பதிவு செய்தது. உதயநிதி ஸ்டாலின் சார்ந்துள்ள திமுக […]

தங்கம் ஒரே நாளில் ரூ.4,120 உயர்ந்தது.

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரே நாளில் இருமுறை சவரனுக்கு ரூ. 4,120 உயர்ந்துள்ளது.இன்று(ஜன. 21) காலை ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 2,800 அதிகரித்து ரூ.1 லட்சத்து 14,000 – க்கு விற்பனை செய்யப்பட்டது.இந்த நிலையில், வர்த்தகம் நிறைவடைவதற்கு முன்பு இன்று பிற்பகலில் கிராமுக்கு ரூ. 515 உயர்ந்து ஒரு கிராம் ரூ. 14,415-க்கும் சவரனுக்கு ரூ. 1,320 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 15,320 – க்கும் விற்பனை செய்யப்படுகிறது.அதேபோல், வெள்ளி […]

டிடிவி தினகரனை அன்போடு வரவேற்கிறேன்: எடப்பாடி பழனிசாமி

என்டிஏ கூட்டணியில் இன்று இணைந்துள்ள அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலர் டிடிவி தினகரனை அன்போடு வரவேற்று, மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்களின் பொற்கால ஆட்சியை மீண்டும் தமிழகத்தில் அமைத்திட மக்கள் நலன் ஒன்றே குறிக்கோளாகக் கொண்டு, நாம் அனைவரும் ஒன்றாக இணைந்து, திமுக குடும்ப ஆட்சியின் பிடியிலிருந்து மக்களைக் காப்போம். தமிழகத்தை மீட்போம்.

இது பங்காளிச் சண்டைதான்! – டிடிவி தினகரன்

சென்னையில் செய்தியாளர்களுடன் பேசிய அவர், “தமிழ்நாட்டில் மக்கள் விரும்புகிற நல்லாட்சிக்கு எங்களுடைய ஆதரவைத் தெரிவிக்கிறோம். என்றைக்கும் விட்டுக்கொடுத்துப் போகிறவர்கள் கெட்டுப் போவதில்லை. அதிமுகவுடன் எங்களுக்கு இருப்பது பங்காளிச் சண்டை. விட்டுக்கொடுத்தவர்கள் கெட்டுப் போவதில்லை.தமிழ்நாட்டில் அம்மாவின் ஆட்சி வருவதற்கு மக்களாட்சி வருவதற்கு நல்லாட்சி வருவதற்கு தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைகிறோம்” என்று தெரிவித்தார்.