அமமுகவின் ஒவ்வொரு தொண்டனும் தமிழ்நாடு முழுவதும் அயராது பாடுபடுவான்: டிடிவி தினகரன் பேச்சு!
மதுராந்தகம் தேசிய ஜனநாயக கூட்டணி பொதுக் கூட்ட மேடையில் பேசிய அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், எந்தவித அழுத்தமும் இன்றி அமமுக தே.ஜ. கூட்டணியில் இணைந்துள்ளது. இந்த கூட்டணியின் வெற்றிக்காக அமமுகவின் ஒவ்வொரு தொண்டனும் தமிழ்நாடு முழுவதும் அயராது பாடுபடுவான் என்கின்ற உறுதியை, பிரதமருக்கும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கும் சொல்லி கொள்கிறேன்.(மதுராந்தகம் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமியின் பெயரை டிடிவி தினகரன் கூறியதும் கூட்டத்தினர் ஆரவாரம்.) நாங்கள் எல்லாம் அம்மாவின் தொண்டர்கள் என்பதை எதிரிகள் மறந்துவிட்டார்கள். […]
சூரியன் மறைந்து விட்டது: அண்ணாமலை பேச்சு
மதுராந்தகம் தே.ஜ. கூட்டணி கூட்டத்தில் பேசிய பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை, “கொளுத்திக் கொண்டிருந்த சூரியன் மறைந்துவிட்டது. இது மாற்றத்திற்கான கூட்டம், மழை பெய்கிறது, மழையால் தாமரை, இலை மலரும்.”என்று அவர் கூறினார்.
இளைஞர்களை போதைப்பெருள் கும்பலிடம் ஒப்படைத்த திமுக.. ஸ்டாலின் மீது பிரதமர் மோடி கடும் ‛தாக்கு’
நாம் தமிழகத்தை திமுகவிடம் இருந்து விடுவிக்க வேண்டும். நாம் தமிழகத்தை வளர்ச்சியடைந்த, பாதுகாப்பான, ஊழல் இல்லாத மாநிலமாக மாற்றுவோம். நான் வெளிப்படையாகப் பார்க்கிறேன், திமுக அரசின் கவுண்டவுன் தொடங்கிவிட்டது திமுக ஆட்சி தமிழகத்தின் வளர்ச்சிக்கு அபாயமானதாக உள்ளது. இங்கே இருக்கும் திமுக அரசாங்கம் நமது இளைஞர்களை போதைப்பொருள் குற்றவாளி கும்பலிடம் ஒப்படைத்து விட்டது. தமிழகத்தில் போதைப்பொருள் புழக்கம் அதிகமாக உள்ளது. தாய் தந்தைகளின் கண்முன்னே குழந்தைகள் சீரழிகிறார்கள். போதைப்பொருளில் இருந்து அவர்களை மீட்க வேண்டும். போதைப்பொருள் மற்றும் […]
சென்னை விமான நிலைய அவலம்
“இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய பொருளாதாரத்தின் நுழைவாயில் – சென்னை விமான நிலையத்திலிருந்து வெளியேறும் மக்களை இப்படித்தான் வரவேற்கிறார்கள்: எங்கும் போஸ்டர்கள் மயம். தெருவிளக்குகள் எரிவதில்லை. இதற்குக் சென்னை மாநகராட்சி, தாம்பரம் மாநகராட்சி அல்லது நெடுஞ்சாலைத்துறை என எந்த அமைப்பும் பொறுப்பேற்பதில்லை. இது மிகவும் மோசமானது.
TAMBARAM JAN 11 TO JAN 17 VOLUME 13 ISSUE 39
CHROMPET JAN 11 TO JAN 17 ISSUE 39 VOLUME 13
தேமுதிக கட்சி கூட்டணிக்கு – தாமதம் ஏன்?
2026ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்கான கூட்டணியை இதுவரை இறுதி செய்யாத பிரேமலதா தொகுதி பங்கீடு விவகாரத்தில் இழுபறி நீடிப்பதே கூட்டணியை இறுதி செய்யாததற்கு காரணம் என தகவல் திமுக, அதிமுக என இரு தரப்பினரிடம் பிரேமலதா கூட்டணி பேச்சுவார்த்தை நடத்திவருவதாக தகவல் திமுக தரப்பில் ஒற்றை இலக்கில் மட்டுமே சீட் எனவும், அதிமுக தரப்பில் இரட்டை இலக்கத்தில் சீட் கொடுக்க ஒப்புதல் எனவும் தகவல்.
தை முடிவதற்குள் உரிய பதில் – ஓ.பன்னீர்செல்வம் பேட்டி
அடுத்தக்கட்ட நகர்வு குறித்து இன்னும் 2 நாட்களில் சென்னையில் நிர்வாகிகளுடன் ஆலோசிக்க உள்ளேன். தை மாதம் முடிவதற்குள் உரிய பதில் அளிப்பேன்” சட்டப்பேரவை தேர்தலுக்கான கூட்டணி நிலைப்பாடு குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு ஓபிஎஸ் பதில். இன்னும் 2 நாட்களில் சென்னையில் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளது. தை முடிவதற்கு இன்னும் நாட்கள் உள்ளன. தை முடிவதற்குள் உரிய பதில் அளிக்கப்படும். அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து மாவட்ட செயலாளர்கள் கூட்டத்திற்கு பிறகு முடிவு எடுக்கப்படும். இவ்வாறு […]
18 சேவைகள் அடங்கிய ‘ஸ்பிரின்ட் 1’ – பதிவுத் துறையின்கீழ் புதிய திட்டம் தொடக்கம்
பதிவுத் துறையின் ஸ்டார் 3.0 திட்டத்தின் கீழ், காகிதமில்லா ஆவணப்பதிவு, நேரடி வருகை இல்லா ஆவணப்பதிவு, தானியங்கி பத்திர உருவாக்கம் உள்ளிட்ட 18 சேவைகளை உள்ளடக்கிய ‘ஸ்பிரின்ட் 1’ செயல் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
அதிமுக பேனர்களில் டிடிவி தினகரன் புறக்கணிப்பு!
மதுராந்தகத்தில் இன்று நடைபெறும் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பொதுக்கூட்டத்துக்காக அதிமுக தரப்பில் வைக்கப்பட்டுள்ள பேனர்களில் அமமுக பொதுச் செயலர் டிடிவி தினகரனின் புகைப்படம் புறக்கணிக்கப்பட்டுள்ளது.ஆனால் அ.ம.மு.கபேனர்களில் எடப்பாடி படம் இடம்பெற்றுள்ளது.