விஜயிடம் சிபிஐ விசாரணை
கரூர் சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை. நடத்துகிறது இந்த விசாரணைக்கு வரும் படி தமிழக வெற்றி கழக தலைவர் விஜய்க்கு சம்மன் அனுப்பப்பட்டு இருந்தது . இதற்காக அவர் தனி விமானத்தில் டெல்லி சென்றார். இன்றும் நாளையும் அவரிடம் விசாரணை நடைபெற உள்ளது விசாரணை இறுதிக்கட்டத்தை அடைந்து விட்டதால் விரைவில் இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
வைகோ பாத யாத்திரை இன்று நிறைவு
போதைப்பொருள் ஒழிப்பு, சாதி, மத மோதல் தடுப்பு உள்ளிட்டவற்றை வலியுறுத்தி, கடந்த 2ம் தேதி திருச்சியில் தொடங்கிய சமத்துவ நடைபயணத்தை மதுரையில் இன்று நிறைவு செய்கிறார் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ஓபுளா படித்துறை பகுதியில் நடைபெறும் நிறைவு விழாவில் அமைச்சர்கள் மூர்த்தி, பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், மதுரை எம்.பி.வெங்கடேசன் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர்
TAMBARAM JAN 04 TO JAN 10 VOLUME 13 ISSUE 38
CHROMPET JAN 04 TO JAN 10 VOLUME 13 ISSUE 38
தங்கம் விலை உயர்வு
சென்னையில் இன்று 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 640 ரூபாய் அதிகரித்து ஒரு சவரன் ஒரு லட்சத்து ஆயிரத்து 440 ரூபாய்க்கும், கிராமுக்கு 80 ரூபாய் அதிகரித்து ஒரு கிராம் 12 ஆயிரத்து 680 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை கிராமுக்கு 8 ரூபாய் அதிகரித்து ஒரு கிராம் 265 ரூபாய்க்கும், கிலோவுக்கு ரூ.8 ஆயிரம் உயர்ந்து, ஒரு கிலோ வெள்ளி 2.65 லட்சம் ரூபாய்க்கு விற்பனை ஆகிறது.
திமுக ஆட்சியை ஒழித்தே தீருவோம் – அமித்ஷா ஆவேசம்
புதுக்கோட்டை பிரச்சார கூட்டத்தில் உள்துறை மந்திரி அமைச்சர் பேசியதாவது:-அதிமுக – பாஜக இடையேயான கூட்டணி இயற்கையான கூட்டணி. 2024இல் அதிமுக, பாஜக இணைந்து போட்டியிட்டு இருந்தால் 26 தொகுதிகளில் வெற்றி பெற்று இருப்போம். வரும் நாட்களில் வலுவான கூட்டணியை அமைத்து திமுக ஆட்சியை முடிவுக்கு கொண்டு வருவோம். தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி நிச்சயம்; திமுக கூட்டணி ஆட்சியை ஒழித்தே தீருவோம் என்று அமித்ஷா பேசினார்
கனிமொழிக்கு ஸ்டாலின் வாழ்த்து
திமுக துணைப் பொதுச்செயலாளரும், எம்.பி.யுமான கனிமொழி இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதையொட்டி, பல அரசியல் கட்சி தலைவர்களும் அவருக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.நாடாளுமன்றக் குழுத் தலைவர் கனிமொழி பிறந்தநாளையொட்டி, “கர்ஜனை மொழி – என் தங்கை கனிமொழி” என முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
திருப்பரங்குன்றம் வழக்கில் நாளை தீர்ப்பு
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என்ற தனி நீதிபதியின் உத்தரவுக்கு எதிரான மேல்முறையீட்டு மனுக்கள் மீது நாளை தீர்ப்பு அளிக்கப்படுகிறது. மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என தனி நீதிபதி உத்தரவிட்டார். இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு, மதுரை மாவட்ட நிர்வாகம், அறநிலையத் துறை, சிக்கந்தர் தர்கா நிர்வாகம் உட்பட 26 மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
பிளாட் ப்ரொமோட்டர்கள் சங்க விழா
தாம்பரத்தில் உள்ள பிளாட் ப்ரொமோட்டர்கள் சங்க விழா மாமல்லபுரத்தில் நடைபெற்றது. தாம்பரத்தில் இயங்கி வரும் Flats Promotion சங்கத்தின் 2026 ஆம் ஆண்டின் குடும்ப கூடுகை விழா மாமல்லபுரத்தில் கலை நிகழ்ச்சிகளுடன் வெகு சிறப்பாக நடைபெற்றது.இவ்விழாவில் ஏராளமானோர் பங்கேற்றனர். நாங்குநேரி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ரூபி மனோகரன், கோவிலம்பாக்கம் பஞ்சாயத்து துணை தலைவர் . சி. மணிமாறன் ஆகியோர் முன்னிலை வகித்தனர் . சங்கத் தலைவர் கோபி வரவேற்புரை நிகழ்த்தினார்.திரைப்பட பின்னணி பாடகர்வேலுமணி பாடல், சிறுவர் சிறுமியரரின் […]
பொங்கல் பரிசு டோக்கன் விநியோகம்
பொங்கல் விழாவை மேலும் சிறப்பாக கொண்டாடிட அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் அனைத்து குடும்பங்களுக்கும் பொங்கல் ரொக்கப் பரிசாக ரூ.3000 வழங்கிட முதல்வர் ஸ்டாலின் ஆணையிட்டுள்ளார். பொங்கல் பரிசுத் தொகுப்பு மற்றும் ரொக்கப் பரிசு மொத்தம் ரூ.6936,17,47,959 செலவில் வழங்கப்படும். பொங்கல் திருநாளுக்கு முன்பாக ரொக்கப் பரிசும், பொங்கல் பரிசுத் தொகுப்பும், வேட்டி சேலைகளும் அனைத்து நியாயவிலைக் கடைகள் வழியாக வழங்கிட அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்படும். அனேகமாக 8ந்தேதி ரொக்கப் […]