ஜிஎஸ்டி மாற்றத்தால் வரும் ரூ.2 லட்சம் கோடி

ஜிஎஸ்டி வரி கடந்த 2017-18-ம் ஆண்​டில் ரூ.7.19 லட்​சம் கோடி​யாக இருந்​தது. இது 2025-ம் ஆண்​டில் ரூ.22.08 லட்​சம் கோடி​யாக உயர்ந்​தது. நாட்​டில் வரி செலுத்​து​வோர் எண்​ணிக்கை முன்பு 65 லட்​ச​மாக இருந்​தது. இது தற்​போது 1.51 கோடி​யாக உயர்ந்​துள்​ளது. ஜிஎஸ்டி சீர்​திருத்​தம் மூலம் நாட்​டின் பொருளா​தா​ரத்​தில் ரூ.2 லட்​சம் கோடி நுழை​யும், மக்​கள் கையில் பணம் புரளும் என்று மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

ஜி.எஸ்.டி வரிவிதிப்பு காரணம் இதுவா? காங்கிரஸ்

மத்திய பாஜக அரசின் ஜி.எஸ்.டி. வரி குறைப்புக்கு பின்னால் இருப்பது பீகார் தேர்தலா? என காங்கிரஸ் கேள்வி கடந்த 8 ஆண்டுகளாக எதிர்க்கட்சிகள் கண்ணீர் விட்டு கதறியும் கேளாத காதுகள், தற்போது வழிக்கு வந்திருப்பது யோசிக்க வைப்பதாகவும் சந்தேகம்.

ஜிஎஸ்டி வரி விதிப்பில் மாற்றம் வருகிறது

தீபாவளி பரிசாக ஜிஎஸ்டி வரிவிதிப்பு முறைகளில் சீர்திருத்தங்கள் கொண்டுவரப்பட உள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார். இதன்மூலமாக தற்போதைய ஐந்து விகித முறையிலிருந்து, இரண்டு விகித ஜிஎஸ்டி முறை அறிமுகமாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

2 லட்சம் கோடியை தாண்டிய ஜி எஸ் டி வசூல்

நாட்டில் நடப்பு நிதியாண்டின் மே மாதத்துக்கான ஜிஎஸ்டி வசூல் ரூ. 2 லட்சம் கோடியைக் கடந்தது .. கடந்த ஆண்டு மே மாதம் ரூ. 1.72 லட்சம் கோடி வசூலான நிலையில், இந்த ஆண்டு, 6.4% அதிகரித்து, ரூ. 2.01 லட்சம் கோடி வசூல். ஆகி உள்ளது. மகாராஷ்டிரா, தமிழ்நாடு, மேற்கு வங்கம், கர்நாடகா உள்ளிட்ட பெரிய மாநிலங்களில் ஜிஎஸ்டி வசூல் 17-25% வரை அதிகரித்து உள்ளது.

இன்ஃபோசிஸ் ₹32,000 கோடி வரி ஏய்ப்பு என தகவல்

இந்தியாவின் முன்னணி ஐ.டி. நிறுவனமான இன்போசிஸ் மீது ₹32,000 கோடி ஜி.எஸ்.டி. வரி ஏய்ப்பு புகாரில் விசாரணை என தகவல் தமிழ்நாடு 2017 -2022 கால கட்டத்தில் வரி ஏய்ப்பு நடந்துள்ளதாகவும், ஜி.எஸ்.டி. புலனாய்வு இயக்குநரகம் விசாரணை நடத்தி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

ரூ.10 ஆயிரம் கோடி GST மோசடி வழக்கில் கோவையைச் சேர்ந்த பெண்ணை கைது செய்த நொய்டா போலீசார்!

போலி பெயர்களில் நிறுவனங்களை பதிவு செய்து 10,000 கோடி ரூபாய் ஜிஎஸ்டி மோசடியில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் கும்பலை நொய்டா போலீசார் கைது செய்தனர். போலியான நிறுவனங்களைப் பயன்படுத்தி அவர்கள் இ-வே பில்களை உருவாக்கி GST மோசடி செய்தது அம்பலம் டெல்லி, நொய்டா, காசியாபாத், ஜெய்ப்பூர் மற்றும் சிந்த்வாரா (எம்.பி) ஆகிய இடங்களை சேர்ந்த 45 பேர் இந்த மோசடி தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ளனர். கோவையில் உலோக தயாரிப்பு நிறுவனம் நடத்தி வந்த சுகன்யா பிரபு (40) என்பவர் […]

ஏப்ரல் மாத ஜிஎஸ்டி வசூல் ரூ.2 லட்சம் கோடி: வரலாறு காணாத சாதனை

புதுடெல்லி: சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து இதுவரையில் இல்லாத அளவுக்குக் கடந்த ஏப்ரல் மாதத்தில் அதிகபட்ச வரி வசூல் ஆகியுள்ளதாக நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் எக்ஸ் சமூகவலைதளப் பக்கத்தில், “இதுவரை இல்லாத அளவுக்கு ஏப்ரல் மாதத்தில் ஜிஎஸ்டி ரூ.2 லட்சம் கோடியாக வசூல் ஆகியுள்ளது” எனப் பதிவிட்டுள்ளார்.

GST பில் கேட்டு வாங்குங்க:ரூ.1 கோடி வரை பரிசு கிடைக்கலாம்

இனி கடைகளில் பொருள் வாங்கினால், அதற்கு, ஜி.எஸ்.டி., பிடித்திருந்தால், ‘பில்’ கேட்டு வாங்கவும். அந்த பில் வாயிலாக, 1 கோடி ரூபாய் வரை, அதிர்ஷ்ட பரிசு கிடைக்க வாய்ப்பு உள்ளது.நாடு முழுதும், ஜி.எஸ்.டி., எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி முறை நடைமுறையில் உள்ளது. இதில் உள்ள மிகப் பெரும் பிரச்னை, வரி ஏய்ப்பு தான். இதை தடுக்க, பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. பி – 2 – பி எனப்படும் வணிகத்தில் இருந்து வணிகத்துக்காக […]

தமிழ்நாட்டிலிருந்து ரூ.9,600.63 கோடி ஜிஎஸ்டி வசூல்

ஜூன் மாத ஜிஎஸ்டி வரியாக ரூ.1,61,497 கோடி வசூல் செய்யப்பட்டதாக ஒன்றிய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது கடந்த ஆண்டு ஜூன் மாதத்தை விட 12% அதிகமாகும். இதன் மூலம் 4வது முறையாக மொத்த ஜிஎஸ்டி வசூல் ரூ.1.60 லட்சம் கோடியை கடந்துள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் தமிழ்நாட்டிலிருந்து ஜிஎஸ்டி வரியாக ரூ.9,600.63 கோடி வசூல் செய்யப்பட்டதாக ஒன்றிய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.