தமிழகத்தின் மொத்த மின்னுற்பத்தி 2021-22-ம் ஆண்டில், 8.68 சதவீதம் அதிகரித்துள்ளதாக மத்திய மின்சார ஆணையம் தெரிவித்துள்ளது

தமிழகத்தில் அரசு நிறுவனமான மின்வாரியத்துக்கு மட்டுமின்றி தனியார் நிறுவனங்களுக்கும் அனல், எரிவாயு, காற்றாலை, சூரியசக்தி மின்நிலையங்கள் உள்ளன. இவை தவிர, மத்திய அரசின் நெய்வேலி நிலக்கரி நிறுவனம், தேசிய அனல்மின் கழகம், இந்திய அணுமின் கழகம் ஆகியவற்றுக்கு தமிழகத்தில் அனல் மற்றும் அணுமின் நிலையங்கள் உள்ளன. மத்திய மின்சார ஆணையம் 2021-22-ம் ஆண்டுக்கான நாட்டின் மின்னுற்பத்தி புள்ளிவிவரங்களை வெளியிட்டுள்ளது. தமிழகத்துக்கு 5-வது இடம்: இதன்படி, தமிழ்நாடு, ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா, கேரளா, புதுச்சேரி, லட்சத்தீவு ஆகியவற்றை உள்ளடக்கிய […]