தமிழ்நாடு முழுவதும் நாளை டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வு

தமிழ்நாடு முழுவதும் பல்வேறு மையங்களில் குரூப்-4 எழுத்துத் தேர்வு நாளை நடைபெறுகிறது. வி.ஏ.ஓ., வனக்காவலர் உள்ளிட்ட 6,244 காலிப் பணியிடங்களுக்கான குரூப்-4 தேர்வை சுமார் 20 லட்சம் எழுதுகின்றனர். நாளை காலை 9.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரை குரூப்-4 தேர்வு நடைபெறுகிறது. தேர்வு தொடங்குவதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன்பு தேர்வு மையங்களுக்கு தேர்வர்கள் சென்றுவிட வேண்டும்.
குரூப்-4 தேர்வுக்காக அறிவிக்கை அடுத்தாண்டு ஜனவரியில் வெளியிடப்பட்டு ஜூன் மாதம் தேர்வு நடத்தப்படும்
குரூப்-2, 2A தேர்வுக்கான அறிவிக்கை மே மாதம் வெளியிடப்பட்டு ஆகஸ்ட்-ல் தேர்வு நடத்தப்படும் எனவும் TNPSC அறிவிப்பு.
“அரசு ஊழியர்கள் மக்கள் சேவையை லட்சியமாக கொண்டு செயல்பட வேண்டும்”

ஒருவருக்கு அரசு வேலை கிடைத்தால் அது ஒட்டுமொத்த குடும்பத்திற்கும் பலன் அளிக்கும். அரசின் திட்டங்களை மக்களுக்கு கொண்டு செல்லும் பணியை எந்த குறையும் இல்லாமல் அரசு ஊழியர்கள் நிறைவேற்ற வேண்டும். ஆசிரியர் தேர்வை வெளிப்படையாக நடத்த அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. மக்கள் சேவையை லட்சியமாகக் கொண்டு அரசு ஊழியர்கள் செயல்பட வேண்டும். அரசுக்கு நல்ல பெயராக இருந்தாலும், கெட்ட பெயராக இருந்தாலும் அது அதிகாரிகளின் செயல்பாட்டை பொறுத்து தான் அமையும்-TNPSC Group-4 பணிக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணி […]
குரூப் 4 தேர்வில் தேர்வானவர்களுக்கு, இரண்டாம் கட்ட கலந்தாய்வுக்கான தேதி அறிவிப்பு

குரூப் 4 தேர்வில் அடங்கிய 3,373 தட்டச்சர் பதவிக்கான மூலச் சான்றிதழ்கள் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு வரும் 21ம் தேதி முதல் அடுத்த மாதம் 11ம் தேதி வரை நடைபெற உள்ளதாக அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது. 1079 சுருக்கெழுத்துத் தட்டச்சர் பதவிக்கான சான்றிதழ்கள் சரிபார்ப்பு, கலந்தாய்வு வரும் நவ.20 முதல் 26ம் தேதி வரை நடைபெறுகிறது. முதல் கலந்தாய்வில் காலியாக VAO உள்ளிட்ட 47 பதவிகள் இதில் நிரப்பப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.