மதுரை மீனாட்சியம்மன் கோவில் தக்காராக டிவிஎஸ் குழுமத்தை சேர்ந்த சோபனா ராமச்சந்திரன் நியமனம்.

ஸ்ரீ சக்கர டயர்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனரான சோபனா இதுவரை தக்காராக இருந்த கரு முத்து கண்ணனுக்கு பதில் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலின் முதல் பெண் தக்கார் ஆவார்
பெயரில்லாமல் வாட்ஸ் ஆப் குழுவை உருவாக்கும் புதிய அம்சத்தை மெட்டா நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது

முன்னதாக, வாட்ஸ்ஆப்பில் ஒரு குழுவை உருவாக்க வேண்டுமென்றால் குழுவுக்கு ஒரு பெயர் என கண்டிப்பாக குறிப்பிட வேண்டும். அதன்பின்னரே குழு உருவாகும். ஆனால், வாட்ஸ்ஆப் செயலியில் தற்போது அப்டேட் செய்துள்ளதன்படி குழுவை உருவாக்கும்போது அதற்கு பெயர் குறிப்பிடத் தேவையில்லை. இதன்படி நீங்கள் யாரையெல்லாம் குழுவில் சேர்க்கிறீர்களோ அவர்களது எண்கள் உங்கள் போனில் என்ன பெயரில் சேமிக்கப்பட்டுள்ளதோ அந்த பெயர்கள் தோன்றும். உதாரணமாக ஏ, பி & சி என்று இருக்கும். குழுவில் உள்ளவர்களுக்கு அவர்களின் போனில் உங்கள் பெயர் என்னவோ […]