ஓராண்டுக்கு முன்பே கல்லூரி படிப்பை முடிக்கலாம்: புதிய நடைமுறைக்கு யுஜிசி ஒப்புதல்

இளநிலை பட்டப் படிப்பை 6 மாதம் அல்லது ஓராண்டு காலம் முன்கூட்டியே முடிப்பதற்கும், தேவைப்பட்டால் நீட்டித்துக் கொள்ளவும் வகை செய்யும் புதிய நடைமுறைக்கு யுஜிசி ஒப்புதல் அளித்துள்ளது. தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்துவது தொடர்பாக தென்மண்டல அளவில் தன்னாட்சி கல்லூரிகளுக்கான கருத்தரங்கம் சென்னை ஐஐடி வளாகத்தில் கடந்த நவம்பர் 2-வது வாரத்தில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக பல்கலைக்கழக மானிய குழு (யுஜிசி) தலைவர் ஜெகதீஷ் குமார் கலந்துகொண்டார். அவர் பேசும்போது, ‘‘மாணவர்கள் விரும்பினால் இளநிலை பட்டப் […]