நடிகை கௌதமி அளித்த நில மோசடி புகாரில் முக்கிய நபராக தேடப்பட்டு வந்த அழகப்பன், அவரது மனைவி நாச்சியம்மாள், சதீஷ் குமார் உட்பட 6 பேரை கேரளாவின் திருச்சூரில் வைத்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்!

டிரான்ஸிட் வாரண்ட் பெற்று கேரளாவில் இருந்து சென்னைக்கு அழைத்து வரும் பணியில் ஈடுபட்டுள்ளனர்!

திருவள்ளூர்: நடிகை கௌதமி அளித்த நில மோசடி புகாரில் கைது செய்யப்பட்ட பலராமனை ஒரு நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரித்த மத்திய குற்றப்பிரிவு போலீசார்;

பலராமன் வீட்டில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களை அடிப்படையாக வைத்தும், தலைமறைவாக உள்ள அழகப்பன் உட்பட சிலரைப் பற்றி மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர்; புகாரின் பேரில் பலராமனை கைது செய்த நிலையில், ஒரு நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க எழும்பூர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுருந்தது

நடிகை கவுதமி புகார் எதிரொலி: காரைக்குடி தொழிலதிபர் வீட்டில் விடிய விடிய போலீசார் சோதனை

காரைக்குடி:தமிழ் திரை உலகில் முன்னணி நடிகையாக வலம் வந்த கவுதமி தான் சம்பாதித்த பணத்தில் தமிழகத்தின் பல இடங்களில் நிலம் மற்றும் சொத்துக்களை வாங்கியிருந்தார்.இதனை விற்பனை செய்வதற்காக குடும்ப நண்பராக இருந்த சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள கோட்டையூரை சேர்ந்த தொழிலதிபர் அழகப்பன் என்பவருக்கு கவுதமி பவர் பத்திரம் மூலம் அதிகாரம் கொடுத்ததாக தெரிகிறது.ஆனால் அழகப்பன் கவுதமியின் சொத்துக்களை விற்று அதற்குரிய பணத்தை முழுமையாக தராமல் பல கோடி ரூபாய் வரை மோசடி செய்ததாக கூறப்படுகிறது. […]

எனது சக உறுப்பினரான கவுதமி பாஜகவில் இருந்து வெளியேறியதைக் கண்டு வருத்தமடைந்தேன்;

அவர் மிகவும் கடின உழைப்பாளி மற்றும் தன்னலமற்ற கட்சிப் பணியாளர்; அவரது எதிர்கால திட்டங்கள் அனைத்தும் சிறப்பாய் அமைய வாழ்த்துகிறேன்”