பேருந்தை மாணவிகள் தள்ளிய விவகாரம் – 4 பேர் சஸ்பெண்ட்

கன்னியாகுமரி: நாகர்கோவிலில் பழுதாகி நின்ற அரசு பேருந்தை கல்லூரி மாணவிகள் தள்ளிய விவகாரம் தொடர்பாக ஓட்டுநர் மற்றும் நடத்துனர் உட்பட 4 பேர் பணியிடை நீக்கம், பழுதாகி நின்ற அரசு பேருந்தை மாணவிகள் வைத்து தள்ளி சென்ற விவகாரம் வீடியோ வெளியான நிலையில் நடவடிக்கை
முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம்

இன்று (25.08.2023) முதலமைச்சர் மாநிலம் முழுவதும் அனைத்து பள்ளிகளிலும் 1ஆம் வகுப்பு முதல் 5ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை விரிவாக்கம் செய்து நாகப்பட்டினம் மாவட்டம், திருக்குவளையில் தொடங்கி வைத்ததைத் தொடர்ந்து, தாம்பரம் மாநகராட்சியில் துணைமேயர் கோ.காமராஜ், பம்மல் மண்டலத்திற்குட்பட்ட திருநீர்மலை பகுதியில் மாநகராட்சி துவக்கப்பள்ளி மாணவர்களுக்கு காலை உணவினை வழங்கி, மாணவர்களுடன் அமர்ந்து உணவருந்தினார். இந்நிகழ்ச்சியில் மாமன்ற உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு தொடக்கப் பள்ளிகளிலும் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம்

மு.க.ஸ்டாலின் இன்று (25.8.2023) இந்தியாவிலேயே முதல் முறையாக தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு தொடக்கப்பள்ளிகளிலும் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை விரிவுப்படுத்தி, 31,008 பள்ளிகளில் 1 முதல் 5ஆம் வகுப்பு வரை பயிலும் 17 இலட்சம் அரசுப் பள்ளி மாணவர்கள் பயன்பெறும் வகையில் தொடங்கி வைக்கும் விதமாக, முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் பிறந்த ஊரான திருக்குவளையில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை அவர்களுக்கு உணவு […]
500 தற்காலிக ஓட்டுநர்களை நியமிக்க அரசு திட்டம்
கர்நாடகாவில் அரசு பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணிக்கும் சக்தி திட்டத்தால், பயணிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனால் கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. ஆனால், ஓட்டுநர்கள் நியமிக்காத நிலையில், ஓட்டுநர்கள் பற்றாக்குறையால் போக்குவரத்து பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதற்காக தனியார் ஏஜென்சிகள் மூலம், 500 தற்காலிக ஓட்டுநர்களை நியமிக்க கேஎஸ்ஆர்டிசி திட்டமிட்டுள்ளது.
அரசுப் பள்ளிகள் வளர்ச்சிக்கு கிராமசபையில் தீர்மானம்

சென்னை: ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின் மாநில திட்ட இயக்குநரகம் சார்பில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: சுதந்திர தினமான ஆகஸ்ட் 15-ம் தேதி கிராமசபை கூட்டம் நடத்தப்பட உள்ளது. இதில் சமீபத்தில் நடைபெற்ற எஸ்எம்சி கூட்டத்தில் பள்ளி வளர்ச்சிக்காக எடுக்கப்பட்ட முடிவுகளை பகிர்ந்து கொண்டு விவாதித்து உரிய தீர்மானங்கள் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். கிராமசபை கூட்டங்களில் எஸ்எம்சி குழுதீர்மானங்களை பகிர்வதன் மூலம்பள்ளிகளின் தேவைகளை அறிந்துகொண்டு பொதுமக்கள் தங்களின் பங்களிப்பை அளிக்க […]
Eris என்ற குறியீட்டுப் பெயருடன் EG.5.1 என அழைக்கப்படும் புதியவகை கொரோனா

இங்கிலாந்தின் மோசமான காலநிலை காரணமாக அங்குள்ள மக்களுக்கு தலைவலி, காய்ச்சல், மூக்கில் நீர்வடிதல் போன்ற அறிகுறிகள் தென்படுகின்றன. இது அதிகமான மக்களிடம் வேகமாக பரவி வருவதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. இங்கிலாந்தின் சுகாதார பாதுகாப்பு முகவரகம் இது குறித்து ஆராய்ந்த போது இது ஒமிக்ரோனின் மாறுபாடு அடைந்த வைரஸ் கிருமி என கண்டறியப்பட்டது. இந்த வைரஸ் இங்கிலாந்தில் ஏழு பேரில் ஒருவருக்குப் பரவியிருப்பதாகவும், இதற்கு கிரேக்க தெய்வத்தின் பெயரான எரிஸ் என்ற பெயர் சூட்டப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.