சென்னையில் ரேஷன் கார்டு இல்லாத மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தகுதியின் அடிப்படையில் 6000 ரூபாய் வரவு வைக்கப்பட்டதாக தமிழக அரசு தகவல்
தமிழகம் தமிழ்நாடு அரசு பள்ளிகளில் 2024-25ம் கல்வியாண்டுக்கான மாணவர்கள் சேர்க்கை இன்று முதல் தொடங்குகிறது

ஐந்து வயது பூர்த்தியடைந்த குழந்தைகளை அரசு பள்ளிகளில் சேர்க்கலாம் என பள்ளிக்கல்வித்துறை சார்பில் அறிவிப்பு வெளியாகி உள்ளது.
எழும்பூர் மருத்துவமனையில் குழந்தைகளை கொண்டு செல்லும் வண்டியில் உட்கார்ந்து விளையாடும் பெண் ஊழியர் ….

சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் உடல்நலம் பாதிக்கப்பட்ட குழந்தைகளை கொண்டு செல்லும் வண்டில் ,” இன்று (13-09-2023) மதியம் கிரிஸ்டல் என்ற தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் ஒப்பந்த பெண் ஊழியர் உட்கார்ந்து விளையாடும் காட்சி. அந்த பெண் ஊழியரை அந்த வண்டியில் அமர வைத்து ஊழியர்கள் தள்ளி செல்லும் காட்சி. இதுகுறித்து எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனை நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
“சென்னை திருவொற்றியூரில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில், போதைப் பாக்கு போட்டதை கண்டித்த ஆசிரியரை மாணவன் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியளிக்கிறது;

ஆசிரியர்கள் கொண்டாடப்பட வேண்டிய ஆசிரியர் நாளில் இப்படி ஒரு நிகழ்வு நடந்ததை நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை; தமிழக அரசு நினைத்தால் ஒரே ஆணையில் அனைத்து மதுக்கடைகளையும் மூட முடியும், சட்டவிரோதமாக விற்பனை செய்யப்படும் அனைத்து போதைப் பொருட்களையும் ஒரே நாளில் கட்டுப்படுத்த முடியும்; இளைஞர்கள், மாணவர்கள் உள்ளிட்ட ஒட்டுமொத்த சமுதாயத்தையும் காக்க வேண்டிய பொறுப்பும், கடமையும் அரசுக்கு இருப்பதால், அனைத்து வகையான போதைப் பொருட்களையும் முற்றிலுமான ஒழித்து தமிழ்நாட்டை போதையில்லாத மாநிலமாக மாற்ற நடவடிக்கை எடுக்க […]
ஆளுநரின் கோரிக்கையை ஏற்க முடியாது தமிழ்நாடு அரசு

தமிழ்நாட்டில் துணைவேந்தர் இல்லாமல் உள்ள 3 பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர் நியமனம் தொடர்பாக தமிழ்நாடு அரசு ஆளுநருக்கு கடிதம் யுஜிசி விதிகளை மட்டும் பின்பற்றினால் போதும் உறுப்பினரை புதிதாகசேர்க்க தேவையில்லை – தமிழ்நாடு அரசு
துணைவேந்தர் இல்லாமல் உள்ள 3 பல்கலைக்கழகங்கள் தொடர்பாக ஆளுநருக்கு அரசு கடிதம்

துணைவேந்தர் இல்லாமல் உள்ள 3 பல்கலைக்கழகங்கள் தொடர்பாக ஆளுநருக்கு அரசு கடிதம் எழுதியுள்ளது. துணைவேந்தரை தேர்ந்தெடுக்க யுஜிசி பிரதிநிதியை சேர்க்க வேண்டுமென ஆளுநர் நிபந்தனை விதித்ததால் கடிதம் எழுதியுள்ளது. யுஜிசி விதிகளை மட்டும் பின்பற்றினால் போதும், உறுப்பினரை புதிதாக சேர்க்கத் தேவையில்லை என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
மனைப்பிரிவுகளை வரன்முறைப்படுத்த கால அவகாசத்தை நீட்டித்து தமிழக அரசு அரசாணை வெளியீடு

29.02.2024 வரை கால அவகாசத்தை நீட்டித்து வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை சார்பில் அரசாணை வெளியீடு திட்டத்தில் இணைய வழி மட்டுமே மனைப்பிரிவுகளை வரன்முறைப்படுத்த விண்ணப்பிக்க முடியும் என அறிவிப்பு
பெருங்களத்தூர் அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச சைக்கிள்

செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் மாநகராட்சி 4வது மண்டலத்திற்கு உட்பட்ட பெருங்களத்தூர் அரசு மேல்நிலை பள்ளியில் தமிழக அரசு சார்பில் விலையில்லா மிதிவண்டிங்களை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர். ராஜா அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றிய பின்னர் 130 பள்ளி மாணவ மாணவிகள் விலையில்லா மிதிவண்டிங்களை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் தாம்பரம் மாநகராட்சி 4வது மண்டல குழு தலைவர் டி.காமராஜ் , பெருங்களத்தூர் எஸ்.சேகர், மாமன்ற உறுப்பினர் […]
குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் மருந்துகள் வழங்குவதில் குளறுபடி

குரோம்பேட்டையில் உள்ள அரசு பொது மருத்துவமனையில் தினமும் ஆயிரக்கணக்கான நோயாளிகள் சிகிச்சைக்கு வந்து செல்கின்றனர். இந்த மருத்துவமனையில் மருந்துகள் வழங்குவதில் குளறுபடி ஏற்பட்டது இதனால் நீண்ட கியூ வரிசையில் நோயாளிகள் காத்திருக்கும் சூழ்நிலை ஏற்பட்டது பயிற்சி மாணவர்கள் மாத்திரைகளை முறையாக வழங்கவில்லை எனவும் புகார் எழுந்தது. இந்நிலையில் பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர் இ.கருணாநிதி தலைமையில் அதிகாரிகள் இன்று குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் ஆய்வு செய்தனர். அரசு மருத்துவமனையில் மருந்துகள் வழங்கும் பகுதியை ஆய்வு செய்த சட்டமன்ற உறுப்பினர் […]
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய தலைவராக, சைலேந்திரபாபுவின் பெயரை மீண்டும் பரிந்துரைத்தது தமிழக அரசு

ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு மீண்டும் கோப்புகளை அனுப்பி வைத்தது அரசு. ஆளுநர் கேட்டிருந்த சந்தேகங்களுக்கான விளக்கத்துடன் கோப்புகளை அனுப்பி வைத்தது அரசு.