மசோதாக்களுக்கு விரைவில் ஒப்புதல் அளிக்க ஆளுநருக்கு உத்தரவிடக்கோரிய தமிழ்நாடு அரசின் மனு

மனு மீது பதில் அளிக்க மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு; மனு மீதான விசாரணை நவம்பர் 20ம் தேதிக்கு ஒத்திவைப்பு.

விவகாரங்கள் நீதிமன்றத்திற்கு வருவதற்கு முன்னதாகவே கண்டிப்பாக ஆளுநர்கள் செயல்பட்டிருக்க வேண்டும்

மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பதில் காலதாமதம் செய்வதாக பஞ்சாப் ஆளுநருக்கு எதிராக மாநில அரசு தொடர்ந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் கருத்து. ஆளுநர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியாளர்கள் அல்ல என்பதை உணர வேண்டும். மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க உத்தரவிடக் கோரி மாநில அரசு நீதிமன்றங்களை நாட வேண்டுமா? -தலைமை நீதிபதி கேள்வி?. ஒரு மசோதாவுக்கு ஒப்புதல் கொடுக்கும் முன்னர் அதனை ஆய்வு செய்யவும், அதுவரை அதை நிறுத்தி வைக்கவும் ஆளுநருக்கு அதிகாரம் உள்ளது. -உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி. மாநில […]

ஆளுநர் ரவிக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்களை விரைந்து விசாரிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு முறையீடு

மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்குவதில் தாமதம், துணை வேந்தர்கள் நியமனத்தில் தேவையற்ற குழப்பத்தை ஏற்படுத்துவதாக என 2 மனுக்களை உச்ச நீதிமன்றத்தில் அரசு தாக்கல் செய்துள்ளது.

ஆளுநருக்கு ஆர்.எஸ்.பாரதி பதில்

“நாகலாந்து மக்களை நான் இழிவுபடுத்துவதாக ஆளுநர் ஆர்.என்.ரவி கூறுவது முற்றிலும் திசைதிருப்பும் முயற்சி” “நாகலாந்து மக்கள் நாய்க்கறி உண்பது அவர்களின் கலாசாரம் என்பதை கவுகாத்தி உயர்நீதிமன்ற தீர்ப்பு உறுதிபடுத்தியுள்ளது” “நாகலாந்து மக்கள் நாய்க்கறி உண்பவர்கள்” என ஆர்.எஸ்.பாரதி இழிவுபடுத்தி பேசியதை ஏற்றுக்கொள்ள முடியாது என ஆளுநர் கண்டனம் தெரிவித்திருந்த நிலையில் பதில்

முன்விடுதலை – ஒப்புதல் கோரி ஆளுநருக்கு கடிதம்

இஸ்லாமிய சிறைவாசிகள் உள்ளிட்டோரை முன்விடுதலை செய்ய, பேரவையில் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் ஆயுள் கைதிகளின் முன்விடுதலை தொடர்பாக கோப்புகளை விரைந்து பரிசீலித்து ஒப்புதல் வழங்க ஆளுநருக்கு சட்டத்துறை அமைச்சர் கடிதம்

உதயநிதி மீது வழக்குப்பதிவு: ஆளுநருடன் பாஜக நிர்வாகிகள் சந்திப்பு

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவிடக்கோரி தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவியை சந்தித்து பாஜக நிர்வாகிகள் மனு அளித்துள்ளனர்.

தி.மு.க., அரசை கலைக்க நடவடிக்கை எடுப்பேன்? சுப்ரமணியசுவாமி கவர்னருக்கு கடிதம்?

தி.மு.க., அரசை கலைக்க நடவடிக்கை எடுப்பேன் என பா.ஜ., மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.சனாதன தர்மத்தை ஒழிப்போம் என சமீபத்தில் தமிழக அமைச்சர் உதயநிதி பேசியது, நாடு முழுதும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. உதயநிதியின் கருத்து இந்து மதத்தினரை படுகொலை செய்ய வேண்டும் என பேசும்படி உள்ளதாக பா.ஜ.வினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், தமிழக கவர்னர் ஆர்.என். ரவிக்கு பாஜக மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான சுப்பிரமணியன் சுவாமி கடிதம் எழுதியுள்ளார். இது தொடர்பாக […]

துணைவேந்தர் இல்லாமல் உள்ள 3 பல்கலைக்கழகங்கள் தொடர்பாக ஆளுநருக்கு அரசு கடிதம்

துணைவேந்தர் இல்லாமல் உள்ள 3 பல்கலைக்கழகங்கள் தொடர்பாக ஆளுநருக்கு அரசு கடிதம் எழுதியுள்ளது. துணைவேந்தரை தேர்ந்தெடுக்க யுஜிசி பிரதிநிதியை சேர்க்க வேண்டுமென ஆளுநர் நிபந்தனை விதித்ததால் கடிதம் எழுதியுள்ளது. யுஜிசி விதிகளை மட்டும் பின்பற்றினால் போதும், உறுப்பினரை புதிதாக சேர்க்கத் தேவையில்லை என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய தலைவராக, சைலேந்திரபாபுவின் பெயரை மீண்டும் பரிந்துரைத்தது தமிழக அரசு

ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு மீண்டும் கோப்புகளை அனுப்பி வைத்தது அரசு. ஆளுநர் கேட்டிருந்த சந்தேகங்களுக்கான விளக்கத்துடன் கோப்புகளை அனுப்பி வைத்தது அரசு.