தாம்பரம் சானடோரியம் அருகே ஜி.எஸ்.டி சாலையை கடக்க முயன்ற பூ வியாபாரம் செய்து வந்த மூதாட்டி மீது அரசு பேருந்து மோதியதில் சம்பவ இடத்தியே உயிரிழந்தார்

சென்னை குரோம்பேட்டை அடுத்த கக்கன் சாவடி பகுதியை சேர்ந்தவர் இசக்கியம்மாள் (80) அதே பகுதியில் பூ வியாபரம் செய்து வந்தார். இன்று காலை வழக்கம் போல் தாம்பரம் மார்கெட் பகுதியில் பூ வாங்குவதற்காக காசநோய் மருத்துவமனை அருகே சாலை கடந்த போது அவ்வழியாக தாம்பரம் பணிமனையில் இருந்து வந்த தாம்பரம்-செங்கல்பட்டு செல்லும் தடம் எண் 500 அரசு பேருந்து இசக்கியம்மாள் மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்க்கு வந்த குரோம்பேட்டை போக்குவரத்து […]

சென்னையில் நடுரோட்டில் தீப்பிடித்த அரசு பஸ் எரிவாயுவில் இயங்கும் என்ஜினில் திடீர் புகை

சென்னை அடையாறு எல்.பி சாலையில் திடீரென தீ பிடித்து எறிந்த MTC பேருந்து! ஓட்டுனரின் எச்சரிக்கையால் நல்வாய்ப்பாக உயிர் தப்பிய பயணிகள்! மக்கள் பயன்பாட்டிற்காக கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு CNG கேஸ் பொருத்தப்பட்ட எம்.டி.சி பேருந்து சென்னையில் அறிமுகப்படுத்தபட்டது. இந்நிலையில் இன்று சென்னை பாரிஸில் இருந்து சிறுசேரி நோக்கி வழக்கமாக புறப்பட்ட இந்த (102) பேருந்து மூன்று மணி அளவில் அடையாறு பேருந்து நிலையம் அருகில் வந்து கொண்டிருக்கையில் ஓட்டுனருக்கு அருகாமையில் உள்ள இன்ஜின் பகுதியில் […]

கேரள அரசு பஸ்களில் டிரைவர்களுக்கு சீட் பெல்ட்

திருவனந்தபுரம்: கார்கள் உள்பட இலகு ரக வாகனங்களில் டிரைவர்கள் மற்றும் முன் இருக்கையில் இருப்பவர்களுக்கு ஏற்கனவே சீட் பெல்ட்டை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பஸ்கள், லாரிகள் உள்பட கனரக வாகனங்களுக்கும் சீட் பெல்ட்டை கட்டாயமாக்க சமீபத்தில் தீர்மானிக்கப்பட்டது. அக்டோபர் 1ம் தேதி முதல் இந்த உத்தரவு அமலுக்கு வருகிறது. இதையடுத்து கேரளாவில் அரசு பஸ்களில் டிரைவர்கள் மற்றும் கேபின்களில் இருப்பவர்களுக்கு சீட் பெல்ட் பொருத்துவதற்கான நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன. இன்னும் ஒரு சில தினங்களில் இதற்கான பணிகள் தொடங்கும் என […]

சதாசிவம் எம்.எல்.ஏ. பங்கேற்ற போராட்டத்தில் அரசு பஸ் கண்ணாடி உடைப்பு

மேச்சேரியில் சதாசிவம் எம்.எல்.ஏ. பங்கேற்ற போராட்டத்தில் அரசு பஸ் கண்ணாடி மீது கல்வீசி உடைக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.சேலம்மேச்சேரி: சாலை மறியல் பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் நெய்வேலியில் கைது செய்யப்பட்டதை கண்டித்து மேட்டூர் தொகுதி எம்.எல்.ஏ. சதாசிவம் தலைமையில் அந்த கட்சியினர் நேற்று மேச்சேரியில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். சேலம் மேற்கு மாவட்ட வன்னியர் சங்க செயலாளர் ராமகிருஷ்ணன், மேச்சேரி வடக்கு ஒன்றிய செயலாளர் சுதாகர், நகர செயலாளர் கோபால், […]