தமிழகத்தில் வாழும் கட்டுமானத் தொழிலாளர்கள் பணியிடத்தில் விபத்தில் உயிரிழக்க நேரிட்டால்

அவர்களின் உடலை உடல் கூராய்வுக்குப் பின்னர் மருத்துவமனையிலிருந்து அரசு அமரர் ஊர்தி மூலம் சொந்த ஊருக்கு எடுத்துச் செல்வதற்கு ஏற்படும் செலவினம் தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரியத்தால், சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சித் தலைவர்கள் வாயிலாக வழங்கப்படும். மேலும், புலம்பெயர்ந்த கட்டுமானத் தொழிலாளர்கள் பணியிடத்தில் விபத்தில் உயிரிழக்க நேரிட்டால் அவர்களின் உடலை, அரசு அமரர் ஊர்தி அல்லது ரயில் மூலம் எடுத்துச் செல்ல ஆகும் தொகையும், விமானம் மூலம் சொந்த ஊருக்கு எடுத்துச் செல்வதெனில் அதிகபட்சமாக ஒரு […]
அரசு ஊழியர்களுக்கு விரைவில் அகவிலைப்படி உயர்வு

ஒன்றிய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி கடந்த மார்ச் மாதம் உயர்த்தப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் அகவிலைப்படி உயர்த்தப்பட உள்ளது. இந்த முறை 3% உயர்த்தப்பட்டு, அகவிலைப்படி 45% ஆக உயரும் என்றும், ஜூலை மாதம் முதல் கணக்கிடப்பட்டு வழங்கப்படும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. அகவிலைப்படி உயர்வால் 1 கோடிக்கும் மேற்பட்ட ஊழியர்கள், ஓய்வூதியர்கள் பயன்பெறுவார்கள்.
சேலம் சமூக நலத்துறையில் பரபரப்பு: அரசு உதவித்தொகை திட்டத்தில் ரூ.89 லட்சம் மோசடி-தற்காலிக பணியாளர், திருநங்கைகள் 2 பேர் கைது

அரசு நிதி உதவி திட்டத்தில் ரூ.89 லட்சம் மோசடியில் ஈடுபட்ட தற்காலிக பெண் பணியாளர், திருநங்கைகள் 2 பேர் என 3 பேரை குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். இதனால் சேலம் சமூக நலத்துறையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.சேலம்சமூக பாதுகாப்பு திட்டம் சேலம் தெற்கு தாலுகா சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தார் அலுவலகம் உள்ளது. இங்கு தாசில்தாராக பணியாற்றி வருபவர் தமிழ்முல்லை. இந்த அலுவலகத்தில் இருந்து முதியோர், விதவை, மாற்றுத்திறனாளிகள், ஓய்வூதியம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களின் கீழ் […]
ரூ.2,000 நோட்டு மாற்றுவதற்கான காலக்கெடு நீட்டிப்பு இல்லை

புழக்கத்தில் உள்ள ரூ.2,000 நோட்டுகளை செப்டம்பர் 30க்குள் வங்கிகளில் மாற்றிக் கொள்ள ரிசர்வ் வங்கி கூறியிருந்தது. இந்த காலக்கெடு மேலும் நீட்டிக்கப்படுமா? என மக்களவையில் உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு ஒன்றிய நிதித்துறை இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி, “தற்போதைய நிலையில் ரூ.2,000 நோட்டுகளை மாற்றுவதற்கான காலக்கெடு நீட்டிப்பு குறித்த பரிசீலனை எதுவும் அரசிடம் இல்லை” என்றார்.
தமிழ்நாடு முழுவதும் நாளை சனிக்கிழமை பள்ளிகள் முழுவேலை நாளாக இயங்கும் என அரசு அறிவிப்பு

முன்னாள் முதலமைச்சர் காமராஜர் பிறந்தநாள், கல்வி வளர்ச்சி தினமாக கொண்டாடப்படுவதால் நாளை பள்ளிகள் செயல்பட உள்ளது. காமராஜரின் புகைப்படத்திற்கு மரியாதை செலுத்தவும், பேச்சுப்போட்டி , ஓவியப்போட்டி , கட்டுரைப் போட்டி , கவிதைப் போட்டி போன்றவற்றை நடத்திடவும் உத்தரவு.