அரசுடன் ஆசிரியர்கள் பேச்சுவார்த்தை தோல்வி: டிபிஐ வளாகத்தில் நாளை போராட்டம்

சென்னை: பள்ளிக்கல்வித் துறையுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் டிபிஐ வளாகத்தில் திட்டமிட்டபடி நாளை (அக்.13) போராட்டம் நடைபெறும் என்று டிட்டோஜாக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துதல், எண்ணும் எழுத்தும் திட்டத்தை கைவிடல், எமிஸ் பதிவேற்றம் பணிகளில் இருந்து விடுவித்தல் என்பன உட்பட 30 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழு (டிட்டோ ஜாக்) சார்பில் சென்னையில் நாளை (அக்.13) போராட்டம் நடத்தப்பட உள்ளது. இதையடுத்து டிட்டோஜாக் […]

கூட்டுறவுச் சங்க உறுப்பினர்கள் பதவிக் காலம்: தமிழக அரசு பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு

சென்னை: கூட்டுறவுச் சங்க உறுப்பினர்களின் பதவிக் காலம், தேர்தலில் வெற்றி பெற்ற நாளிலிருந்து தொடங்குகிறது என தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை எதிர்த்த மேல்முறையீடு வழக்கில், தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் கூட்டுறவு சங்கங்களுக்கு கடந்த 2018-ம் ஆண்டு ஏப்ரல், ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் தேர்தல் நடத்தப்பட்டது. இருப்பினும், வழக்குகள் காரணமாக, சில கூட்டுறவு சங்கங்களில், 10 முதல் 14 மாதங்கள் தாமதமாக, 2019-ம் ஆண்டு ஜூன் மாதம் தான் […]

தமிழக அரசு மீது அன்புமணி குற்றச்சாட்டு

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பள்ளிக்கல்வி இயக்குனர் அலுவலக வளாகத்தில் 3 வகையான ஆசிரியர் அமைப்புகள் தங்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி காலவரையற்ற உண்ணாநிலை போராட்டம் நடத்தி வருகின்றனர். கடந்த 6 நாட்களாக போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், அதுகுறித்து சம்பந்தப்பட்ட ஆசிரியர் அமைப்புகளுடன் பேச்சு நடத்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் முன்வராதது கண்டிக்கத்தக்கது. சமவேலைக்கு சம ஊதியம் என்ற கோரிக்கை 14 ஆண்டுகளாகவும், பணி நிலைப்புக் கோரிக்கை 12 ஆண்டுகளாகவும், பழைய ஓய்வூதியக் கோரிக்கை 20 ஆண்டுகளாகவும் எழுப்பப்பட்டு […]

கர்நாடகாவுக்கு அரிசி தர மறுத்த மத்திய அரசு: சித்தராமையா குற்றச்சாட்டு

‘கர்நாடகாவிற்கு கூடுதலாக 5 கிலோ இலவச அரிசி வழங்குவதற்காக, இந்திய உணவு கழகத்திடம் அரிசி வழங்குமாறு கோரினோம். ஆனால் மத்திய அரசு, அரிசி வழங்க மறுத்து முட்டுக்கட்டை போட்டது’ என கர்நாடக முதல்வர் சித்தராமையா குற்றம் சாட்டினார்.

மறைந்த தந்தையின் அரசு வேலையை மகளுக்கு கருணை அடைப்படையில் வழங்க ஐகோர்ட் கிளை உத்தரவு

மறைந்த தந்தையின் அரசு வேலையை மகளுக்கு கருணை அடைப்படையில் வழங்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. மகளுக்கு திருமணமாகிவிட்டதால் அவருக்கு வாரிசு பணி வழங்கமுடியாது எனக் கூறியதை ஏற்க முடியாது. குடும்பத்தின் பொருளாதார சூழலை கருத்தில் கொண்டு திருமணமான மகளுக்கும் வாரிசு வேலை வழங்கலாம் என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

அரசு ஊழியர் குழந்தைகளுக்கான கல்வி முன்பணம் உயர்வு

அரசு ஊழியர்களின் குழந்தைகள் பயில்வதற்கான கல்வி முன்பணத் தொகை உயர்த்தப்பட்டு அரசாணை வெளியீடு. தொழில்முறை கல்வி – ரூ.50,000; கலை – அறிவியல், பல்தொழில்நுட்ப கல்லூரிகளில் பயிலுவோருக்கு ரூ.25,000 ஆக உயர்வு. உயர்த்தப்பட்ட கல்வி முன்பணத் தொகை 2023-24 கல்வி ஆண்டு முதல் வழங்கப்படும் என அரசாணையில் தகவல்.

நாட்டின் 77வது சுதந்திர தின விழா கொண்டாட்டம்.டெல்லி செங்கோட்டையில் தேசியக்கொடியை ஏற்றினார் பிரதமர் மோடி.

செங்கோட்டையில் 10வது முறையாக தேசியக்கொடி ஏற்றினார் பிரதமர் மோடி. 10 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்; 1000 சிசிடிவி கேமிராக்கள் மூலம் கண்காணிப்பு.: உலகின் மிகப்பெரிய ஏற்றுமதியாளர்களாக இந்தியர்கள் உருவாகி உள்ளனர்.இந்தியாவில் உழைக்கும் மக்களுக்கு நான் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். நாட்டின் கிராமங்களில் இருந்து திறமையான விளையாட்டு வீரர்கள் உருவாகி வருகின்றனர்.இந்தியா நவீனத்துவத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.இந்தியா இந்த பயணத்தில் நிலையாக இருக்க நிலையான அரசு தேவை.நாட்டின் வளர்ச்சிக்கு உறுதியான அரசை மக்கள் விரும்புகின்றனர்.இந்தியா மிகப்பெரிய வளர்ச்சியை […]

சென்னை தலைமைக்கழகத்தில் முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி.

மதுரையில் எழுச்சி மாநாடு நடக்க இருக்கும் நிலையில் சென்னையிலிருந்து ஒரு தொடர் ஓட்டம்,கிட்டதட்ட 500 கிலோ மீட்டர்,ஒரு நாளை 60 கிலோ மீட்டர் வரை இந்த தொடர் ஓட்டத்தைக் கழகத்தின் சகோதரர்கள்,மாவட்டச் செயலாளர் அசோக் தலைமையிலே நிகழ்ச்சி ஏற்பாடு செய்து இன்றைக்கு நம்முடைய பொதுச்செயலாளரால் தொடர் ஓட்டம் தொடங்கிவைக்கப்பட்டது.இவ்வாறு தெரிவித்தார்.தொடர்ந்து செய்தியாளர்கள் கேட்ட கேள்வியும்,அதற்கு அவர் அளித்த பதிலும் வருமாறு. கேள்வி– காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசு தெரிவித்த கருத்து குறித்து பதில்—காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசு,ஏற்கனவே […]