புதிய குடும்ப அட்டை இல்லாவிட்டாலும் ரேசன் கடைகளில் பொருள்கள் பெறலாம் – தமிழ்நாடு அரசு அறிவிப்பு!

தமிழ்நாட்டில் புதிய குடும்ப அட்டைகள் தொடர்ந்து விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன. கடந்த 2021 முதல் கடந்த ஆண்டு ஜூன் வரையிலான காலத்தில் மட்டும் 15 லட்சம் புதிய குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. குடும்ப அட்டைகளின் அடிப்படையில் புதிய நலத்திட்ட உதவிகளை அளிக்க வசதியாக, குடும்ப அட்டைகள் விநியோகம் செய்யும் பணி தற்காலிமாக நிறுத்தி வைக்கப்பட்டது. முன்னதாக, இணையவழியில் பெறப்பட்ட விண்ணப்பங்கள் சரிபார்க்கப்பட்டு தகுதியுடைய 45,409 குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த குடும்ப அட்டைதாரர்கள் அளித்த கைப்பேசி […]

நடப்பு நிதியாண்டில் இருந்து முன்னாள் ராணுவ வீரர்களுக்கு சொத்து வரி, வீட்டு வரி செலுத்துவதில் இருந்து விலக்கு அளித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது

இதன்மூலம் 1.20 லட்சம் முன்னாள் ராணுவ வீரர்கள் பயன் பெறுவார்கள். பட்ஜெட் அறிவிப்பன் படி பொதுத் துறை செயலாளர் அரசாணை வெளியிட்டார்.

அரசு ஊழியர்கள் பணிக்கு வராவிட்டால் ஊதியம் கிடையாது என்பதுடன், கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் கொண்டுவர வேண்டும், காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 26ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட போவதாக ஜாக்டோ – ஜியோ அமைப்பினர் அறிவித்துள்ளனர்.

கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் – ரயில் நிலையத்தை இணைக்கும் ஆகாய நடைபாதை அமைக்க டெண்டர் கோரியது தமிழ்நாடு அரசு

நடைபாதை அமைக்கும் பணிகளை சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் மேற்கொள்ள உள்ளது! கிளாம்பாக்கம் ரயில் நிலையத்தில் இருந்து பேருந்து நிலையத்தின் மையப்பகுதிக்கு 400 மீ நீளத்தில் ஆகாய நடைபாதை அமைக்கப்பட உள்ளது!

அரசுப் பணியாளர்களை இடமாற்றம் செய்ய வலியுறுத்தல்

நாடாளுமன்ற தேர்தல் வருவதால் இம்மாத இறுதிக்குள் அரசுப் பணியாளர்களை இடமாற்றம் செய்ய தமிழக அரசுக்கு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ கடிதம் 3 ஆண்டுகளுக்கு மேல் ஒரே இடத்தில் பணிபுரியும் அரசுப் பணியாளர்களை இடமாற்றம் செய்ய வலியுறுத்தல்

தமிழக அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் குரூப்-2 காலி பணியிடங்கள் 5,860ஆக அதிகரிப்பு : முதலில் 5240 காலியிடங்கள் இருந்தநிலையில், தற்போது புதிதாக 620 பணியிடங்கள் சேர்க்கப்பட்டு, காலியிடங்கள் 5,860 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.