பங்களாதேஷில் சலிமுல்லாகான் தலைமையில் இடைக்கால அரசு அமைக்கப்பட்டிருப்பதாக ராணுவம் அறிவித்துள்ளது
தமிழ்நாட்டில் தற்போது நடைபெற்று வரும் கொலைகள் அரசாங்கத்தால் ஏற்பட்டது கிடையாது

ஒருவருக்கொருவர் மீது உள்ள போட்டியால் கொலைகள் நடைபெறுகிறது; இதற்கு தமிழ்நாடு அரசு பொறுப்பேற்க முடியாது; மேலும் சட்டம் – ஒழுங்கை பேணிக்காப்பதற்கு தமிழ்நாடு அரசு தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது” -புதுக்கோட்டையில் சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி பேட்டி
பட்ஜெட்டில் தமிழ்நாடு புறக்கணிப்பு – மத்திய அரசைக் கண்டித்து சென்னையில் திமுகவினர் ஆர்ப்பாட்டம்
காவிரி நடுவர் மன்றம் அளித்த தீர்பை அவமதிக்கும் வகையில் கர்நாடக அரசுக்கு கண்டனம்

காவிரி நடுவர் மன்றத்தின் உத்தரவை செயல்படுத்த கர்நாடக அரசு தொடர்ந்து மறுத்து வருகிறது. கர்நாடக அரசின் முடிவை ஏற்று கொள்ள முடியாது காவிரி விவகாரத்தில் தமிழகத்திற்கு போதிய நீர் வழங்க உச்ச நீதி மன்றத்தை நாட முடிவு காவிரி நீரை உடனடியாக விடுவிக்க காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட வேண்டும் – முதல்வர்
முதுநிலை மருத்துவப் படிப்புகளில் அரசு மருத்துவர்களுக்கான சேவை இட ஒதுக்கீட்டை வழங்க மறுப்பது கடும் கண்டனத்திற்குரியது – அரசு மருத்துவர்கள் மற்றும் பொதுமக்களின் நலனுக்கு எதிரான சுகாதாரத்துறையின் அரசாணை எண் 151ஐ உடனடியாக தமிழக அரசு திரும்ப பெற வேண்டும்

பொது மருத்துவம், பொது அறுவை சிகிச்சை, மகப்பேறு மற்றும் குழந்தைகள் நல மருத்துவம் உள்ளிட்ட ஒருசில முதுநிலை படிப்புகளைத் தவிர, பிறதுறைகளில் அரசு மருத்துவர்கள் பட்ட மேற்படிப்புகளை பயில்வதற்கான சேவை இட ஒதுக்கீட்டை நிறுத்தி வைத்து தமிழக அரசு அரசாணை பிறப்பித்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அரசு மருத்துவர்கள் தாங்கள் விரும்பும் பாடப்பிரிவுகளை தேர்ந்தெடுத்து பயில தடைவிதிக்கும் திமுக அரசின் இந்த பிற்போக்குத்தனமான நடவடிக்கை, அரசு மருத்துவர்களின் எதிர்காலம் மட்டுமல்லாமல், அரசு மருத்துவமனைகளை நாடி வரும் ஏழை, எளிய […]
5ஜி அலைக்கற்றை ஏலம் மூலம் ரூ.96,238 கோடி திரட்ட இலக்கு நிர்ணயித்த ஒன்றிய அரசுக்கு ஏமாற்றம்

5ஜி அலைக்கற்றை ஏலம் மூலம் ரூ.96,238 கோடி திரட்ட இலக்கு நிர்ணயித்த ஒன்றிய அரசுக்கு ஏமாற்றம் ஏற்பட்டுள்ளது. நேற்று முடிவடந்த அலைகற்றை ஏலம் விற்பனை மூலம் ஒன்றிய அரசுக்கு ரூ.11,340 கோடி மட்டுமே கிடைத்துள்ளது. அலைகற்றை ஏலம் மூலம் ஒன்றிய அரசு திரட்ட திட்டமிட்டிருந்த தொகையில் ரூ.11,340 கோடி என்பது 12% ஆகும்.
தொகுப்பூதியத்தை உயர்த்தியது தமிழக அரசு

ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் பணியாற்றும் கணினி உதவியாளர்களுக்கு தொகுப்பூதியம் ₹16 ஆயிரத்தில் இருந்து ₹20 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது. 2023ஆம் ஆண்டு வரை மாதம் ₹14 ஆயிரம் தொகுப்பூதியம் வழங்கப்பட்ட நிலையில், மார்ச் மாதத்தில் இருந்து ₹16 ஆயிரமாக உயர்த்தப்பட்டது. இந்நிலையில், தொகுப்பூதியத்தை ₹4000 உயர்த்தி ₹20000ஆக வழங்க ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை முதன்மை செயலாளர் உத்தரவிட்டுள்ளார்.
கள்ளர் சீரமைப்புப் பள்ளிகளை பள்ளிக்கல்வித்துறையோடு இணைக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும் – சமூக அமைப்புகளின் கருத்துக்களை கேட்காமல் அரசே தன்னிச்சையாக முடிவெடுப்பது சட்டவிரோதமாகும்.

கள்ளர் சமுதாயத்தினர் கல்வியறிவு பெறவும், சமூகம் மற்றும் பொருளாதாரத்தில் உயர்நிலையை அடைய வேண்டும் என்ற நோக்கத்திலும் தொடங்கப்பட்ட கள்ளர் சீரமைப்புப் பள்ளிகளை பள்ளிக்கல்வித்துறையுடன் இணைப்பது தொடர்பாக அரசின் உயர் அதிகாரிகள் ஆலோசனைக் கூட்டம் நடத்தியிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. கடந்த 2023-24 ஆம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கையில், இடம்பெற்றிருந்த கள்ளர் சீரமைப்புப் பள்ளிகள் அனைத்தும் பள்ளிக்கல்வித்துறையுடன் இணைக்கப்படும் என்ற அறிவிப்பிற்கு கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில் அதற்கான நடவடிக்கைகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. இந்நிலையில், கள்ளர் […]
மதுபாட்டில் திரும்பப்பெறும் திட்டம்- டாஸ்மாக் பதில்

“மதுபாட்டிலுக்கு கூடுதலாக ரூ.10-க்கு விற்றதன் மூலம் 12 மாவட்டங்களில் 306.32 கோடி ரூபாய் வசூல் செய்யப்பட்டுள்ளது” காலி மதுபாட்டில்களை திருப்பிக் கொடுத்தவர்களுக்கு ரூ.297.12 கோடி திருப்பிக் கொடுக்கப்பட்டுள்ளது – டாஸ்மாக் நிர்வாகம் சென்னை உயர்நீதிமன்றத்தில் டாஸ்மாக் நிர்வாகம் தரப்பில் பதில்
வாகனங்களின் நம்பர் பிளேட்டில் ஸ்டிக்கர் ஒட்டுவதில் விதித்த கட்டுப்பாடுகள் இன்று முதல் நடைமுறைக்கு வந்தது

நம்பர் பிளேட்டில் அங்கீகரிக்கப்படாத ஸ்டிக்கர் ஒட்டினால் அபராதம் விதிக்கப்படும். ஊடகத்தில் பணியாற்றுவோர் பெயரில் வாகனம் இருந்தால் அதில் அரசு வழங்கும் ஊடகம் ஸ்டிக்கர் ஒட்டிக்கொள்ளலாம். முதல் தடவை விதிமீறலில் ஈடுபட்டால் ரூ.500, 2ஆவது தடவை என்றால் ரூ.1,500 அபராதம் வசூலிக்கப்படும்.