தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் மற்றும் பள்ளி கல்வித்துறை சங்கங்கள் யாவும் தங்கள் மீதான திமுக அரசின் கவனிப்பற்ற தன்மையைக் கண்டித்து கடந்த வாரம் அறிக்கை வெளியிட்டுள்ளன

பள்ளிகளில் ரெகுலர் ஆசிரியர்கள் போக குறைந்த சம்பளத்தில் ஒப்பந்த ஆசிரியர்கள் நியமித்தல் தவறானது என்றும் இன்னும் பல விதமான கோரிக்கைகளை முன்வைத்து முதல்வரை சந்திக்க சென்றால் அவர்களை ஸ்டாலின் சந்திக்க மறுத்து விட்டார். திமுகவை ஆட்சிக்கட்டிலில்அமர வைத்து அழகு பார்த்தோம்! இப்போது முதல்வராக இருப்பதால் சந்திக்க மறுக்கிறீர்கள் !நீங்கள் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த போது எங்களை சந்திக்க முடிந்தது. ஆனால் இப்போது மட்டுமென்ன மறுப்பு! அடுத்த தேர்தலில் உங்களை மறுபடியும் எதிர்க்கட்சி தலைவராக்கி வைப்பது தான் சிறந்தது […]

மத்திய அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு

பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் முடிவு ஜூலை 1ம் தேதி முன் தேதியிட்டு மத்திய அரசு பணியாளர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு வழங்கப்படுகிறது அகவிலைப்படி உயர்வின் மூலம் 49.18 லட்சம் பணியாளர்களும் 64.89 லட்சம் ஓய்வூதியதாரர்களும் பயன் பெறுவார்கள்

தமிழக அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிப்பு

அனைத்து அரசு பொதுத்துறை நிறுவன ஊழியர்களுக்கும் தீபாவளி போனஸை அறிவித்துள்ளது தமிழக அரசு. பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் சி மற்றும் டி பிரிவு தொழிலாளர்களுக்கு 20% வரை மிகை ஊதியம் மற்றும் கருணைத் தொகை வழங்கப்படும். நிரந்தரத் தொழிலாளர்கள் குறைந்தபட்சம் ரூ.8,400, அதிகபட்சம் ரூ.16,800-ஐ போனஸ் ஆக பெறுவர் – முதல்வர் மு.க.ஸ்டாலின்.

அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி ₹65 லட்சம் மோசடி செய்ததாக அதிமுக முன்னாள் அமைச்சர் சுப்பிரமணியன் மற்றும் அவரது மகள் மீது சேலம் லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு

சேலத்தைச் சேர்ந்த பாய் வியாபாரி முனுசாமியிடம் மோசடி செய்ததாக புகார். ஆதிதிராவிடர் நலத்துறைக்கு 80 பேரை பணிக்கு எடுப்பதாக கூறி ₹65 லட்சம் பெற்று மோசடி செய்ததாக குற்றச்சாட்டு.

சிறுவாணியில் அணை கட்ட அனுமதி கோரி கேரளா அரசு அளித்த விண்ணப்பத்தை ஒன்றிய அரசு திருப்பி அனுப்பியது

சிறுவாணி ஆற்றில் அணை கட்ட அனுமதி கோரி கேரள அரசு அளித்த விண்ணப்பத்துக்கு தமிழ்நாடு அரசு கடும் ஆட்சேபம் தெரிவித்தது. கேரள அரசின் திட்டத்துக்கு அனுமதி அளிக்கக்கூடாது என்று தமிழ்நாடு அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்தது. தமிழ்நாட்டின் எதிர்ப்பை அடுத்து விண்ணப்பத்தை ஒன்றிய சுற்றுச்சூழல் அமைச்சகம் திருப்பி அனுப்பியது.

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு திறன் மதிப்பீட்டுத் தேர்வு: அக்.7 முதல் 10 வரை நடைபெறும்

சென்னை: அரசுப் பள்ளிகளில் 6 முதல் 9-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு கற்றல் திறன்வழி மதிப்பீட்டுத் தேர்வு அக்டோபர் 7-ம் தேதி முதல் நடைபெறவுள்ளது. இதுகுறித்து மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் சார்பில், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை விவரம்; தமிழக அரசின் முன்னோடித் திட்டங்களில் ஒன்றான மாநில மதிப்பீட்டுப் புலம் கடந்த 2021-ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. அதன்படி அரசுப் பள்ளிகளில் 6 முதல் 9-ம் […]

விவசாயிகளுக்கு 50% மானியம்.. தமிழக அரசு அறிவிப்பு

விவசாயத்திற்காக புதிய மின் மோட்டார் வாங்க விரும்பும் விவசாயிகளுக்கு தமிழ்நாடு அரசு 50 சதவீதம் மானியம் வழங்கி வருகிறது. இந்த மானியத்தை பெறுவதற்கு விவசாயிகள் ஐந்து ஏக்கர் வரை நிலம் வைத்திருக்க வேண்டும். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின பிரிவை சார்ந்த சிருறு குறு விவசாயிகளுக்கு இத்திட்டத்தில் முன்னுரிமை அளிக்கப்படுகிறது. இத்திட்டத்திற்காக ரூ.7 கோடியே 50 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. விவசாயிகள் இதனை https://mis.aed.tn.gov.in/ என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

சர்ச்சைக்குரிய விநாயகர் சதுர்த்தி சுற்றறிக்கை ரத்து – தமிழக அரசு

அரசுப் பள்ளிகளில் விநாயகர் சதுர்த்தி தொடர்பாக உறுதிமொழி ஏற்க அறிவுறுத்தி வெளியிடப்பட்ட சுற்றறிக்கையை ரத்து செய்வதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. தவறான சுற்றறிக்கை அனுப்பிய அலுவலர்கள் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், மாசு கட்டுப்பாட்டு வாரியத்தால் வெளியிடப்பட்ட இந்த அறிக்கையானது. விநாயகர் சதுர்த்தி விழா ஏற்பட்டளர்கள், சிலை செய்வோர் உள்ளிட்டவர்களுக்கு விடுக்கப்பட்ட அறிவுறுத்தல்கள் என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

ரேசன் கடைகளின் பெயரை மாற்ற மத்திய அரசு திட்டம்

நியாயவிலை கடைகளுக்கு ‘ஜன் போஷான் கேந்த்ராஸ்’ என்று பெயர் மாற்ற மத்திய அரசு திட்டம். நாடு முழுவதும் முதல்கட்டமாக சோதனை அடிப்படையில் 60 ரேசன் கடைகளின் பெயரை மாற்றுகிறது மத்திய அரசு. குஜராத், ராஜஸ்தான், தெலுங்கானா, உத்தரப்பிரதேசத்தில் 60 ரேசன் கடைகளின் பெயரை சோதனை முயற்சியாக மாற்ற திட்டம்.