9 சட்டங்களுக்கு கவர்னர் ஒப்புதல்

தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட 9 மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல். அளித்தார் 2 முறை நிறைவேற்றப்பட்ட தமிழ்நாடு நிதி நிர்வாக பொறுப்புடைமை மசோதாவுக்கும் ஆளுநர் ரவி ஒப்புதல். அளித்து உள்ளார் முன்னாள் எம்.எல்.ஏ ஓய்வூதியத்தை உயர்த்துவது சிறு குற்றங்களுக்கு சிறைத் தண்டனைக்கு பதிலாக அபராதம் விதிக்கும் மசோதா உள்பட 9 மசோதாக்களுக்கு ஒப்புதல் அளித்தார்

அமைச்சரவை மாற்றம் குறித்த, அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகக் கூடும் என தகவல்.!

தமிழக அமைச்சரவை மாற்றம் குறித்த கடிதம் ஆளுநருக்கு அனுப்பப்பட்டுள்ளதாக தகவல். தென் மாவட்ட நிகழ்ச்சிகள் முடிந்து ஆளுநர் இரவு சென்னை திரும்பியதும் கடிதம் குறித்து பரிசீலித்து முடிவெடுப்பார் எனவும் தகவல். விரைவில் அமைச்சரவை மாற்றம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகக் கூடும்.

ஆளுநர் விருந்தில் முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்கிறார்

ஆளுநர் வழங்கும் தேநீர் விருந்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார் ஆளுநர் பொறுப்பிற்கு மதிப்பளிக்கும் வகையில் தேநீர் விருந்தில் அரசு சார்பில் பங்கேற்கிறோம் – அமைச்சர் தங்கம் தென்னரசு திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் ஆளுநரின் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக அறிவித்திருந்தனர்.

10-க்கும் மேற்பட்ட சட்ட மசோதாக்களை மீண்டும் திருப்பி அனுப்பினார் ஆளுநர் ஆர்.என்.ரவி.

மசோதாக்களுக்கு ஒப்புதல் கோரிய வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில் திருப்பி அனுப்பினார். மசோதாக்களை மீண்டும் தமிழ்நாடு அரசு நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்ப திட்டமிட்டுள்ளதாக தகவல்.

மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காத ஆளுநர் ஆரிப் முகமது கானுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் கேரள அரசு ரிட் மனு தாக்கல்

8 மசோதாக்கள் ஆளுநர் ஆரிப் முகமது கானிடம் நிலுவையில் உள்ளன. மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க ஆளுநர் கால தாமதம். மசோதாக்களுக்கு உரிய நேரத்தில் ஒப்புதல் அளிக்க ஆளுநருக்கு உத்தரவிட வேண்டும் – கேரள அரசு கோரிக்கை தமிழ்நாடு, பஞ்சாப் மாநிலங்களை தொடர்ந்து ஆளுநருக்கு எதிராக கேரள அரசும் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல்.

ஆளுநருக்கு எதிராக தமிழக அரசு வழக்கு

மாநில அரசு நிறைவேற்றி அனுப்பிய சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்காமல் உள்ள ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக தமிழக அரசு வழக்கு. மசோதாக்கள், அரசு உத்தரவுகளுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்க கால வரம்பு நிர்ணயிக்க வேண்டும் என மனுவில் கோரிக்கை

ஆளுநர் மாளிகை நுழைவாயில் முன்பு எரிபொருள் நிரப்பிய புட்டியை வீசிய புகாரில் கைது செய்யப்பட்டுள்ள வினோத் என்ற கருக்கா வினோத் மீது ஏற்கனவே பல வழக்குகள் இருக்கிறது

இவரை சிறையில் இருந்து பிணையில் எடுத்த வழக்கறிஞர் பாஜக-வில் இருப்பதாக ஒரு தகவல் கிடைத்துள்ளது. ஏற்கனவே பாஜக அலுவலகம் முன்பு இதே போல் தாக்குதல் நடத்தி இருக்கும் இந்த வினோத்தை, பாஜக வழக்கறிஞரே பிணையில் எடுத்துள்ளது வேறொரு சந்தேகத்தை கிளப்புகிறது. இந்த கோணத்திலும் தமிழ்நாடு காவல்துறை தீவிரமாக தனது விசாரணையை விரிவுபடுத்தி இருக்கிறது. மாண்புமிகு சட்டத்துறை அமைச்சர் இரா.ரகுபதி அவர்கள் அறிக்கை.