அரசு ஊழியர்கள் அகவிலைப்படி உயர்வு

தமிழக அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை 55%-ல் இருந்து 58% ஆக உயர்த்தி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். கடந்த ஜூலை 1ம் தேதி முன்தேதியிட்டு இது அமலுக்கு வரும் இதன் மூலம் 16 லட்சம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள் பயன்பெறுவார்கள்; அரசுக்கு ஆண்டுக்கு ரூ1829 கோடி கூடுதல் செலவினம் ஏற்படும் எனவும் அரசு தெரிவித்துள்ளது

அரசு ஊழியர்கள் ரூபாய் 5000 க்கு மேல் செலவு செய்ய தடை

அரசு ஊழியர்கள் ரூபாய் 5000 க்கு மேல் செலவு செய்ய தடைஉத்தராகண்டில் அரசு ஊழியர்கள் ரூ.5,000 மேல் செலவு செய்ய வேண்டுமானால் | உயர் அதிகாரிகளிடம் அனுமதி பெற வேண்டும் என அம்மாநில அரசு புதிய உத்தரவு! மேலும், 5 வருடங்களுக்கு ஒருமுறை அரசு ஊழியர்கள் தங்கள் சொத்து விவரங்களை தெரிவிக்க வேண்டும், அசையா சொத்துகளை தானமாக கொடுத்தாலும் அதை தெரிவிக்க வேண்டும் என அரசாணையில் கூறப்பட்டுள்ளது.