ஆம்னி பஸ் லாரி மோதல் 20 பேர் உயிரிழப்பு

கர்நாடக மாநிலம் சித்ரதுர்கா மாவட்டத்தில் இன்று அதிகாலை படுக்கை வசதியுடன் கூடிய ஆம்னி பேருந்து மீது எதிர்புறம் வந்த லாரி மோதியது. இந்த விபத்தை தொடர்ந்து தீ பற்றியது. இதில் சுமார் 20பேர் உடல் கருகி உயிரிழந்ததாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த விபத்து பெங்களூருவை மும்பை மற்றும் புனே உடன் இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை 48-ல் ஹிரியூர் அருகே நிகழ்ந்துள்ளது.

கரூர் சம்பவம் டெல்லி விசாரணைக்கு வர புஸ்சி ஆனந்துக்கு உத்தரவு

தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய் பரப்புரையில் 41 பேர் கரூரில் பலியான சம்பவ தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது .தற்போது கட்சியின் முக்கிய தலைவரான புஸ்சி ஆனந்த் உள்பட 4 பேரை 29ஆம் தேதி விசாரணைக்காக டெல்லிக்கு வருமாறு சிபிஐ உத்தரவிட்டுள்ளது

தங்கம் விலை நாலு நாளில் 3360 உயர்வு

இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 அதிகரித்து, ரூ.1,02,560க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.20 அதிகரித்து ஒரு கிராம் ரூ.12,820-க்கு விற்பனையாகிறது. இதன்மூலம் தங்கம் விலை வரலாறு காணாத புதிய உச்சத்தை தொட்டு இருக்கிறது.தங்கம் விலை கடந்த 4 நாட்களில் 3,360 அதிகரித்துள்ளது. தங்கத்தை தொடர்ந்து வெள்ளி விலையும் அதிகரித்துள்ளது. அதன்படி, வெள்ளி கிராமுக்கு ரூ.1-ம், கிலோவுக்கு ரூ.1,000-ம் அதிகரித்து, ஒரு கிராம் 245-க்கும், கிலோவுக்கு ரூ.2,45,000-க்கு விற்பனையாகிறது.

ஆருத்ரா தரிசன விழா கொடியேற்றம்.

கடலூர்:- சிதம்பரம் நடராஜர் கோயிலில் மார்கழி மாத ஆருத்ரா தரிசன விழா கொடியேற்றத்துடன் துவங்கியது. நடராஜர் சன்னதிக்கு எதிரே உள்ள கொடி மரத்தில் வேத மந்திரங்கள் முழங்க, வாத்திய கருவிகள் இசைக்க கொடியேற்றப்பட்டது. உத்சவ ஆச்சாரியார் சிவாநாத் தீட்சிதர் கொடியேற்றி வைத்தார். வருகிற ஜனவரி மாதம் 2ஆம் தேதி தேரோட்டமும், 3ஆம் தேதி ஆருத்ரா தரிசன விழாவும் நடைபெற உள்ளது.

கிறிஸ்துமஸ் பிரார்த்தனையில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்பு

டெல்லி:டெல்லியில் உள்ள தி கதீட்ரல் சர்ச் ஆஃப் தி ரிடெம்ப்ஷனில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் காலை ஆராதனையில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார். கிறிஸ்துமஸ் பண்டிகை இயேசு கிறிஸ்துவின் பிறந்தநாளை குறிப்பதுடன் நம்பிக்கை, அமைதி, மன்னிப்பு, அன்பு ஆகியவற்றை அடிப்படையாக கொண்டாடப்படுகிறது.இந்நிலையில் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு பிரதமர் மோடி டெல்லியில் உள்ள தி கதீட்ரல் ஆஃப் ரிடம்ஷன் தேவாலயத்தில் நடைபெற்ற சிறப்பு பிரார்த்தனையில் பங்கேற்றார். இதுகுறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “டெல்லியில் உள்ள […]

பாகுபலி ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டது.

ஆந்திரா ஸ்ரீஹரிகோட்டாவின் 2ஆவது ஏவுதளத்தில் இருந்து பாகுபலி ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டது. தொலைதூரப் பகுதிக்கு கைப்பேசி இணைப்பு, அதிவேக 5ஜி இணையதள சேவை வழங்க இந்த செயற்கைக்கோள் உதவும். இஸ்ரோ அனுப்பிய செயற்கைக்கோள்களில் மிக அதிக எடை கொண்ட செயற்கைக்கோளாக இது இருக்கும். அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்ட AST SpaceMobile நிறுவனம், செயற்கைக்கோள் மூலம் 4ஜி, 5ஜி இணையச் சேவை வழங்கும் திட்டத்தின் ஒரு பகுதியாக இந்தச் செயற்கைக்கோளை வடிவமைத்துள்ளது.

தொடர்ந்து உச்சத்தை தொடும் தங்கம்

இன்றும் தங்கம் விலை புதிய உச்சத்தில் விற்பனையாகிறது. இன்று கிராமுக்கு 30 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.12,800-க்கும் சவரனுக்கு 240 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ஒரு லட்சத்து 2 ஆயிரம் 400 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. இதனால் தங்கம் வரலாறு காணாத புதிய உச்சத்தை தொட்டுள்ளது.

தினசரி 110 கிலோமீட்டர் பள்ளிக்கு சைக்கிளில் வரும் ஆசிரியர்

மதுரையைச் சேர்ந்த உடற்கல்வி ஆசிரியர் ஒருவர், மானாமதுரையில் உள்ள பள்ளிக்கு 110 கி.மீ. சைக்கிளில் வந்து செல்கிறார். மதுரை கூடல்நகரைச் சேர்ந்தவர் ராபின் சுந்தர்சிங் (47). இவர் மானாமதுரையில் உள்ள அரசு உதவிபெறும் உயர்நிலைப் பள்ளியில் 2005-ம் ஆண்டு முதல் உடற்கல்வி ஆசிரியராக பணிபுரிகிறார். இவர் மதுரையிலிருந்து 55 கி.மீ. தொலைவில் உள்ள பள்ளிக்கு ஒருநாள் இடைவெளி யில் சைக்கிளில் வந்து செல் கிறார். இதற்காக காலை 5.30 மணிக்கே வீட்டிலிருந்து புறப்படும் அவர், காலை 8.30 […]

திருமாவளவன் கட்சியை கலைத்தால் நான் 10 ஆயிரம் பேருக்கு சோறு போடுகிறேன்’’நடிகை கஸ்தூரி

`தீபம் ஏற்றிவிட்டால் எய்ம்ஸ் வருமா, சோறு கிடைக்குமா என கேட்கிறாரே திருமாவளவன், சந்தனக்கூடு நடப்பதால் சோறு கிடைக்குமா என கேட்பாரா? அவர் கட்சியை கலைத்தால் நான் 10 ஆயிரம் பேருக்கு சோறு போடுகிறேன்’’திருப்பரங்குன்றத்தில் நடிகை கஸ்தூரி