கூட்டணிக்கு வரும் புதிய கட்சி -எடப்பாடி தகவல்
அதிமுக கூட்டணியில் பாரதிய ஜனதா, அன்புமணி பா.ம.க ஆகியோர் இணைந்துள்ளனர் தற்போது மேலூம் ஒரு கட்சி ஓரிருநாளில் கூட்டணிக்கு வரும் என்று எடப்பாடி அறிவித்துள்ளார்
ஆட்சியில் பங்கு ராகுல் காந்தி ஆலோசனை
காங்கிரஸ் கட்சி திமுக கூட்டணியில் ஆட்சியில் பங்கு தர வேண்டும் என்று கேட்டு வருகிறது ஆனால் அவ்வாறு பங்கு தர முடியாது என்று அமைச்சர் ஐ பெரியசாமி நேற்று திட்டவட்டமாக அறிவித்தார் இதனை ஸ்டாலின் சொன்னதாக அவர் கூறினார் இந்த நிலையில் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசிக்க ராகுல் காந்தி தமிழககாங்கிரசாரை டெல்லிக்கு அழைத்துள்ளார்
ராமதாசுடன் திமுக பேச்சுவார்த்தை
திமுக கூட்டணியில் சேர்வது குறித்து பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் ராமதாஸ் பேச்சாற்றை நடத்தி வருகிறார் இதே போல ஜான்பாண்டியனும் திமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார் விரைவில் இது பற்றி இறுதி முடிவு எடுக்கப்பட வேண்டும் கூறினார்
விஜயிடம் சிபிஐ விசாரணை
கரூர் சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை. நடத்துகிறது இந்த விசாரணைக்கு வரும் படி தமிழக வெற்றி கழக தலைவர் விஜய்க்கு சம்மன் அனுப்பப்பட்டு இருந்தது . இதற்காக அவர் தனி விமானத்தில் டெல்லி சென்றார். இன்றும் நாளையும் அவரிடம் விசாரணை நடைபெற உள்ளது விசாரணை இறுதிக்கட்டத்தை அடைந்து விட்டதால் விரைவில் இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
வைகோ பாத யாத்திரை இன்று நிறைவு
போதைப்பொருள் ஒழிப்பு, சாதி, மத மோதல் தடுப்பு உள்ளிட்டவற்றை வலியுறுத்தி, கடந்த 2ம் தேதி திருச்சியில் தொடங்கிய சமத்துவ நடைபயணத்தை மதுரையில் இன்று நிறைவு செய்கிறார் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ஓபுளா படித்துறை பகுதியில் நடைபெறும் நிறைவு விழாவில் அமைச்சர்கள் மூர்த்தி, பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், மதுரை எம்.பி.வெங்கடேசன் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர்
TAMBARAM JAN 04 TO JAN 10 VOLUME 13 ISSUE 38
CHROMPET JAN 04 TO JAN 10 VOLUME 13 ISSUE 38
தங்கம் விலை உயர்வு
சென்னையில் இன்று 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 640 ரூபாய் அதிகரித்து ஒரு சவரன் ஒரு லட்சத்து ஆயிரத்து 440 ரூபாய்க்கும், கிராமுக்கு 80 ரூபாய் அதிகரித்து ஒரு கிராம் 12 ஆயிரத்து 680 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை கிராமுக்கு 8 ரூபாய் அதிகரித்து ஒரு கிராம் 265 ரூபாய்க்கும், கிலோவுக்கு ரூ.8 ஆயிரம் உயர்ந்து, ஒரு கிலோ வெள்ளி 2.65 லட்சம் ரூபாய்க்கு விற்பனை ஆகிறது.
திமுக ஆட்சியை ஒழித்தே தீருவோம் – அமித்ஷா ஆவேசம்
புதுக்கோட்டை பிரச்சார கூட்டத்தில் உள்துறை மந்திரி அமைச்சர் பேசியதாவது:-அதிமுக – பாஜக இடையேயான கூட்டணி இயற்கையான கூட்டணி. 2024இல் அதிமுக, பாஜக இணைந்து போட்டியிட்டு இருந்தால் 26 தொகுதிகளில் வெற்றி பெற்று இருப்போம். வரும் நாட்களில் வலுவான கூட்டணியை அமைத்து திமுக ஆட்சியை முடிவுக்கு கொண்டு வருவோம். தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி நிச்சயம்; திமுக கூட்டணி ஆட்சியை ஒழித்தே தீருவோம் என்று அமித்ஷா பேசினார்
கனிமொழிக்கு ஸ்டாலின் வாழ்த்து
திமுக துணைப் பொதுச்செயலாளரும், எம்.பி.யுமான கனிமொழி இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதையொட்டி, பல அரசியல் கட்சி தலைவர்களும் அவருக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.நாடாளுமன்றக் குழுத் தலைவர் கனிமொழி பிறந்தநாளையொட்டி, “கர்ஜனை மொழி – என் தங்கை கனிமொழி” என முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.