ஆந்திராவில் ரூ.50,000 கோடியில் google தரவு மையம்
ஆசியாவிலேயே மிகப்பெரிய டேட்டா சென்டரரை ஆந்திராவில் ரூ.50,000 கோடி செலவில் கூகிள் உருவாக்குகிறது.விசாகப்பட்டினத்தில் 6 பில்லியன் டாலர் (சுமார் ரூ. 50,000 கோடி) முதலீட்டில், 1 ஜிகாபைட் திறன் கொண்ட தரவு மையத்தை (data center) கூகுள் நிறுவனம் அமைக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.
பிக்சல் செல்போனை தமிழ்நாட்டில் உற்பத்தி செய்ய கூகுள் நிறுவனம் திட்டமிட்டுள்ளது

தமிழ்நாட்டில் ஃபாக்ஸ்கான் நிறுவன தொழிற்சாலையில் பிக்சல் செல்போன்கள் தயாரிக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. பிக்சல் செல்போன்கள் விற்பனை செய்யும் கூகுள் நிறுவனம், ஃபாக்ஸ்கான் நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இந்திய சந்தை வாய்ப்பை பயன்படுத்தி தமிழ்நாட்டில் பிக்சல் செல்போன்களை தயாரிக்க கூகுள் திட்டமிட்டுள்ளது.
கூகுளில் இந்தியர்கள் அதிகம் தேடிய வார்த்தை

யூடியூப்பில் முதல் 5 ஆயிரம் ஃபாலோவர்களை பெறுவது எப்படி? என இந்த ஆண்டு இந்தியர்கள் அதிகம் தேடியதாக கூகுளில் நிறுவனம் தெரிவித்துள்ளது. ‘How to’ என்ற பிரிவில் இந்த தேடல் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளதாக கூகுள் நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது. முதல் இடத்தில் சூரிய ஒளியில் இருந்து தோல் மற்றும் முடியை காக்கும் வீட்டு வைத்தியம்? என்ன என்று அதிக மக்கள் கூகுளில் தேடியுள்ளனர். 2023ம் ஆண்டு கூகுளில் அதிகம் தேடப்பட்ட Recipe-களில் மாங்காய் ஊறுகாய் முதலிடம் […]
‘ஜெயிலர்’ படம் குறித்து ட்வீட் செய்த கூகுள்

நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உலகம் முழுவதும் வெளியாகியுள்ள திரைப்படம் ‘ஜெயிலர்’. அனிருத் இசையமைத்துள்ள இப்படத்தை அனைத்து தரப்பு ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இந்த நிலையில் ‘ஜெயிலர்’ படம் குறித்து ட்வீட் செய்துள்ளது கூகுள் இந்தியா நிறுவனம். “தலைவரு நிரந்தரம், ஒரு வழியாக காத்திருப்பு முடிவுக்கு வந்தது” என பதிவிட்டு ‘அண்ணாத்த’ படம் வெளியான தேதியை வெளியிட்டுள்ளது.