தங்கம் விலை குறைந்தது.

22 காரட் ஆபரணத் தங்கம்ஒரு கிராம் நேற்று ரூ.10,005 ஆக இருந்த விலை, இன்று ரூ.35 குறைந்து ரூ.9,970 ஆக விற்பனையாகிறது. ஒரு சவரன் (8 கிராம்) நேற்று ரூ.80,040 ஆக இருந்த விலை, இன்று ரூ.280 குறைந்து ரூ.79,760 ஆக விற்பனையாகிறது.

தங்கம் பவுன் ரூ 80 ஆயிரத்தை நெருங்கியது

சென்னையில் இன்று 22 காரட் ஆபரணத் தங்கம், கிராமுக்கு ரூ.70 உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.9,865-க்கும், பவுனுக்கு ரூ.560 உயர்ந்து ஒரு பவுன் தங்கம் ரூ.78,920-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை கிராமுக்கு ஒரு ரூபாய் குறைந்து 136 ரூபாய்க்கும், ஒரு கிலோ வெள்ளி 1,36,000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

தங்கம் விலை இன்றும் குறைந்தது

22 காரட் ஆபரணத் தங்கம்ஒரு சவரன் நேற்று ரூ.73,840 ஆக இருந்த நிலையில், இன்று ரூ.120 குறைந்து ரூ.73,720 ஆக விற்பனையாகிறது. ஒரு கிராம் நேற்று ரூ.9,230 ஆக இருந்த நிலையில், இன்று ரூ.15 குறைந்து ரூ.9,215 ஆக விற்பனையாகிறது

தங்கம் விலையில் சரிவு

இன்று காலை தங்கம் விலை பவுனுக்கு ரூ.560 குறைந்து, ஒரு பவுன் ரூ.75 ஆயிரத்திற்கும், ஒரு கிராம் ரூ.9,375-க்கும் விற்பனை ஆனது.

75000 த்தை தாண்டிய தங்கம் விலை

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரன் ரூ.75,000ஐ தாண்டியது. ஒரு கிராம் தங்கம் ரூ 10 உயர்ந்து ரூ. 9,380க்கு விற்பனையாகிறது. ஒரு சவரன் ரூ. 75 ஆயிரத்து 040க்கு விற்பனையாகிறது.

தாம்பரத்தில் பூட்டியிருந்த வீடுகளில் 20 பவுன் நகை திருட்டு.

தாம்பரத்தில் முடிச்சூர் பகுதி சக்தி நகரில் குடியிருப்பவர் கிருஷ்ணகுமார் பணியில் இருந்து ஓய்வு பெற்றவர் வெளியூர் சென்று திரும்பி வந்த போது அவரது வீட்டின் பூட்டு உடைத்து கிடந்தது. உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் இருந்த 20 பவுன் நகை மட்டும் 50 ஆயிரம் ரொக்கம் திருடு போனது தெரிய வந்தது.அவரது பக்கத்து வீட்டிலும் இதேபோல பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. அதன் உரிமையாளர்கள் இன்னும் வரவில்லை .இந்த சம்பவங்கள் குறித்து பீர்க்கங்கரணை போலீசார் விசாரித்து வருகின்றனர்

தங்கம் நிலையில் சரிவு

இன்று (ஜூலை 31) சவரனுக்கு ரூ.320 குறைந்து ஒரு பவுன் ரூ.73,360-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.40 குறைந்து ஒரு கிராம் ரூ. 9,170-க்கு விற்பனையாகிறது.

புதிய உச்சத்தில் தங்கம் விலை

கடந்த 2 நாட்களில் தங்கத்தின் விலை புதிய உச்சத்தை எட்டி இருக்கிறது. நேற்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.74,280க்கு விற்பனையான நிலையில், இன்று ஒரு கிராமுக்கு ரூ.95 உயர்ந்து ஒரு கிராம் ரூ.9,380க்கும், சவரனுக்கு ரூ.760 அதிகரித்து ரூ.75,040க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

3 -வது நாளாக உயர்ந்த தங்கம் விலை

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஜூலை 18), சவரனுக்கு ரூ.480 அதிகரித்து ரூ.73,360-க்கும், கிராம் ரூ.9,170-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.கடந்த மூன்று நாட்களாக தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது