ராமேஸ்வரம் கடலில் வீசப்பட்ட 10 கிலோ கடத்தல் தங்கம்; தேடும் பணியில் ஸ்கூபா டைவிங் வீரர்கள்

ராமேஸ்வரம் : ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அருகே வேதாளை கடலில் இலங்கையில் இருந்து படகில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ தங்கக்கட்டிகளை கடத்தல்காரர்கள் வீசி விட்டு தப்பினர். அந்த தங்கக்கட்டிகளை இந்திய கடலோர காவல் படையின் ஸ்கூபா டைவிங் வீரர்கள் கடலுக்குள் தேடி வருகின்றனர். இலங்கையில் இருந்து மன்னார் வளைகுடா கடல் வழியாக மண்டபம் வேதாளைக்கு தங்கக்கட்டிகள் சிலர் கடத்தி வருவதாக திருச்சி மத்திய வருவாய் புலனாய்வுத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதுகுறித்து மண்டபத்தில் உள்ள இந்திய கடலோரக் […]