துக்க நிகழ்ச்சிக்கு சென்ற என்ஜினீயர் வீட்டில் 60 பவுன் கொள்ளை

துக்க நிகழ்சிக்கு சென்ற ஐ.டி பொறியாளர் வீட்டின் பூட்டை உடைத்து 60 சவரன் நகை, 50 ஆயிரம் பணம் கொள்ளை. சென்னையை அடுத்த பழைய பல்லாவரம் பல்லாவா கார்டன் 8 வது தெருவை சேர்ந்தவர் குமரன் (44), இவர் மனைவியின் தந்தை கும்பகோணத்தில் வசித்த நிலையில் சிலநாட்களுக்கு முன்னதாக காலமானர். அந்த துக்க நிகழ்வுக்கு 30ம் தேதி வீட்டை பூட்டி சென்ற நிலையில் வீட்டில் வேலை செய்யும் பெண்மணி வந்தபோது கிரில் பூட்டு, கதவு உடைக்கப்பட்டு இருந்தது. […]