பசு மாட்டிடம் பால் குடித்து வளரும் ஆட்டுக்குட்டிகள்

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள கடசோலை கிராமத்தை சேர்ந்தவர் நாகராஜ். விவசாயியான இவர் ஆடு, மாடுகளை வளர்த்து வருகிறார். அவர் வளர்த்து வந்த ஆடு ஒன்று, 2 குட்டிகளை ஈன்றது. அவை கடந்த சில நாட்கள் தாய் ஆட்டிடம் இருந்து பாலை குடித்து வளர்ந்து வந்தன. இந்த நிலையில், நாகராஜ் வீட்டில் வளர்க்கும் பசு மாட்டிடம் ஆட்டுக்குட்டுகள் பாலை குடிக்கத் தொடங்கின. அப்போது ஆட்டுக்குட்டிகள் பால் குடிப்பதை பசு மாடு தடுக்கவில்லை. எனவே, அவை தொடர்ந்து […]

கோவாவில் சுற்றுலா படகு கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்தார். கிறிஸ்துமஸ், ஆங்கில புத்தாண்டையொட்டி சுற்றுலா தலங்களில் ஒன்றான கோவா களைகட்டி உள்ளது.

இந்நிலையில், வடக்கு கோவாவில் உள்ள கலங்குட் கடற்கரை பகுதியில் இருந்து ஒரு சுற்றுலா படகு நேற்று சென்று கொண்டிருந்தது. இதில் மகாராஷ்டிரா மாநிலம் கெட் பகுதியில் வசிக்கும் ஒரே குடும்பத்தை சேர்ந்த 13 பேர் உள்பட 21 பேர் பயணம் சென்றனர். அரபி கடலின் நடுவே சென்று கொண்டிருந்த சுற்றுலா படகு அதிக பாரம் காரணமாக கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த மீட்பு குழுவினர் கடலில் தத்தளித்து கொண்டிருந்த அனைவரையும் மீட்டு […]

நடிகர் விஜய், வெங்கட் பிரபு இயக்கும் ‘தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம்’ (கோட்) படத்தில் நடித்துள்ளார்

இந்தப் படத்தில் பிரசாந்த், மோகன், பிரபுதேவா, ஜெயராம், கணேஷ், யோகிபாபு, அஜ்மல் அமீர், சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஏஜிஎஸ் நிறுவனம் படத்தை தயாரித்துள்ளது.இந்த படத்தில் அப்பா – மகன் என இரட்டை வேடத்தில் நடித்துள்ளார் விஜய். எனவே, இப்படம் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து, தற்போது முழுவீச்சில் கிராபிக்ஸ் பணிகள் உள்பட தொழில்நுட்ப பணிகள் நடைபெற்று வருகிறது.முன்னதாக, கோட் படத்தின் மூன்று பாடல்கள் வெளியாகின. இந்த […]