சுவர்களுக்கு இடையே சிக்கிய பெண் மீட்பு

சென்னை மணலி காமராஜர் நகரை சேர்ந்தவர் பொம்மி (வயது 60 ) உறவினர்கள் திருப்பதி சென்றபோது இவர் வீட்டில் சுவர்களுக்கு இடையே கிடந்த வீடு துடைக்கும் மாப் எடுக்க சென்றார். அப்போது சுவர்களுக்குள் சிக்கி வெளியே வர முடியாமல் கூச்சல் போட்டார் .இது பற்றி தகவல் அறிந்ததும் தீயணைப்பு படையினர் 3 மணி நேரம் போராடி அவரை மீட்டனர். அவருக்கு லேசான சிராய்ப்பு காயங்கள் ஏற்பட்டன.அதற்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

பெண்ணின் திருமண வயதை 21-ஆக உயர்த்த நாடாளுமன்றத்தில் விவாதம்

இந்தியாவில் ஆண்களை போலவே பெண்களின் திருமண வயதையும் 21-ஆக உயர்த்துவது குறித்து, வரும் 22-ந் தேதி நடைபெற உள்ள நாடாளுமன்ற நிலைக்குழுவில் விவாதிக்கப்பட உள்ளது. இரு பாலருக்கும் திருமண வயது 21-ஆக உயர்த்தி கடந்த 2021-ம் ஆண்டு தாக்கல் செய்த மசோதா காலாவதியாகிவிட்ட நிலையில், தற்போது நாடாளுமன்ற நிலைக்குழு விவாதிக்க உள்ளது.

பேருந்தை மாணவிகள் தள்ளிய விவகாரம் – 4 பேர் சஸ்பெண்ட்

கன்னியாகுமரி: நாகர்கோவிலில் பழுதாகி நின்ற அரசு பேருந்தை கல்லூரி மாணவிகள் தள்ளிய விவகாரம் தொடர்பாக ஓட்டுநர் மற்றும் நடத்துனர் உட்பட 4 பேர் பணியிடை நீக்கம், பழுதாகி நின்ற அரசு பேருந்தை மாணவிகள் வைத்து தள்ளி சென்ற விவகாரம் வீடியோ வெளியான நிலையில் நடவடிக்கை